பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 93 வெளிவிடப்பெறும் நிலை உடனே ஏற்படுவதில்லை; முதலில் ஒரு குறிப்பிட்ட அளவு கால எல்லை கடந்தேயாக வேண்டும். இந்தக் கால நீட்டம் தனி நிலையில் மிகவும் குறுகியதே; ஆனல் ஒரு கோள் நிலை எலக்ட்ரான் அணுக்கருவினை ஒரு முழுச்சுற்று சுற்றி வருவதற்குத் தேவையான காலத்துடன் ஒப்பிடுமிடத்து, இது மிக நீண்டதாக உள்ளது. இடைநிலை யில் உண்டான துகள்களினின்றும் உண்மையான அடிப் படைத் துகள்களே வேறுபடுத்தி அறிவதற்கு இதனை ஒரு சிறப்பியல்பாகக் கொள்ளலாம். அணுக்கருவின் அடிப்படைத் துகள்கள் : இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்ட அணுக் கருவின் அடிப்படைத் துகள்களாகக் கருதப்பெறக்கூடிய துகள்களை இனி பரிசீலனை செய்வோம். ஆல்பாத் துகள் களைக் கொண்டோ, அன்றி பிற அடிப்படைத் துகள்களைக் கொண்டோ தாக்குதல் நிகழ்த்தும் முறையில் அணுக்கருவினை யும் வெளித்தலையீட்டிற்கு உட்படுத்தலாம். ஏற்கெனவே நாம் கூறியதுபோல, அணுக்கரு இயக்கம் நடைபெற்று ஒரு புரோட்டான் அல்லது ஒரு நியூட்ரான் சுழற்றி எறியப் பெறுகின்றது. ஆல்பாத் துகள்கள் எறியப்பெறக்கூடிய சந் தர்ப்பங்களும் உள்ளன. ஆனால், ஆல்பாத்துகள்கள் உண் மையான அடிப்படைத் துகள்கள் அல்ல என்பது ஒருதலை. ஒரு புரோட்டான் அல்லது ஒரு நியூட்ரான்-ஓர் அணுக்கருவின் புறத்தமைப்பிலுள்ள கோள் நிலை எலக்டரானைப் போல்வெளியே எறியப்பெறுதல் தலையீடு நேரிட்ட கணத்திலேயே சாதாரணமாக நிகழ்கின்றது. ஆனால், அத்தகைய அணுக் கரு இயக்கத்தில் நிலையற்ற, கதிரியக்கமுள்ள அணுவொன்று உண்டாக்கப்பெறலாம்; அஃது ஒரு கதிரியக்கச் செயலிளுல் மேலும் மாற்றம் அடைகின்றது. இந்த நிகழ்ச்சிகளில் எலக்ட் ரான்கள் அல்லது ப்ாசிட்ரான்கள் மட்டிலுமோ, அல்லது நியூட்ரிளுேக்கள் சேர்ந்தோ வெளிவிடப்பெறுகின்றன. இயற் கையில் கிடைக்கும் கதிரியக்கப் பொருள்களைப்போலவே,