பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 213 ஒரு துகள் வெளிவிடப்பெறுகின்றது; இது பின்பு இரண்டாவது துகளொன்றில் உரு மாற்ற இயக்கத்தைத் (Transmutation reaction) 37sir@@sir psi. Gehlul-lசுவடுகளிலுள்ள வெள்ளி நுண்பொடிகளின் (Silver grains) செறிவில் காணப்பெறும் வேற்றுமைக்குக் காரணம், அணுக் கருத் துகள்களின் நேர் வேகங்களினிடையேயுள்ள வேற்று மையே ஆகும், துகள்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிக வேகமாக உள்ளனவோ, அவ்வளவுக்கவ்வளவு அவை மெல்லிதாகப் பரவுகின்றன; அவை விட்டுப்போகும் சுவடும் அவ்வளவுக்கவ்வளவு நீளமாகவே உள்ளது. ஆயின், அத் துகள்கள் எல்லாத் திசைகளிலும் சிதறப்பெறுகின்றன. ஆகவே, பெரும்பான்மையான பாதைகள் கிட்டத்தட்ட மிகக் குட்டையாக வுள்ளனபோல் காணப்பெறுகின்றன. 'அணுக்கரு பிளவுறுதல்’: இறுதியாகவுள்ள முக்கியமான அணுக்கருக்களின் சிதைந்தழிதல் அணுக்கரு பிளவுறுதல் (Nuclear fission) என்பது: அஃதாவது, அணுக்கரு இரண்டாகப் பிளவுறுவது. இச்செயல் பெர்லின் மாநகரில் 1938-இல் ஹான், ஸ்ட்ராஸ் மன் என்ற அறிஞர்களால் கண்டறியப் பெற்றது. இச்செய லில் நடைபெறுவது இதுதான்; சூடாக்கப் பெற்ற ஒர் அணுக் கரு முதலில் தனிப்பட்டதுகள்களை வெளிவிடச் செய்திருக்க லாம்; ஆனால், அது முழுவதும் அதிர்வு பெறக்கூடும்; இத் தகைய அதிர்வினைப்பெறும் கிளர்ச்சிக்காக நுழைக்கப்பெறும் எல்லா ஆற்றலை அல்லது ஆற்றலின் ஒரு பகுதியை அது பயன்படுத்திக்கொள்ளுகின்றது. ஒரு யுரேனிய அணுக்கரு ஒரு நியூட்ரானல் தாக்கப்பெறுங்கால் பெரும்பாலும் அது நிகழ்கின்றது. அதில் நடைபெறும் இயக்கம் விளக்கப்பட வடிவில், படம் - 26இல், காட்டப்பெற்றுள்ளது. கோள வடிவிலிருந்த அணுக்கரு முதலில் அதிர்வுபெற்று ஒன்று விட்டு ஒன்ருகவுள்ள நீளமானதும் தட்டையானதுமான நீள்வட்ட (Elliptical) வடிவத்தைப் பெறுகின்றது. நீளவடிவ