பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.38 அணுக்கரு பெளதிகம் கிடையிலும் ஒரு மாற்றியின்மூலம்(Transformer)பொருத்தப் பெற்ருல், ஒரு கால எல்லே முழுவதும், எடுத்துக்காட்டாக d புள்ளியின் மாறு மின்னேட்ட மின் அழுத்தம் எப்பொழு தும் a புள்ளியின் மின் அழுத்தத்திற்குக் கீழ் தணியாதவரை யில், d, c, முதலிய புள்ளிகள் வால்வுகளின் மூலம் நேர்மின் னுாட்டம் பெறுகின்றன; a-யின் மின் அழுத்தம் 0 க்குச் சம மாக இருப்பதாகக் கொள்ளலாம். இல்லாவிட்டால் V, என்ற வால்வு வழியாக ஒரு மின்னோட்டம் இன்னும் பாய்ந்து கொண்டேயிருக்கும். எனவே, மாற்றியின் மிக உயர்ந்த மின் அழுத்தம் H-B ஆக இருந்தால், அமைதி நிலையிலுள்ள d என்ற புள்ளியின் மின் அழுத்தம் 0-க்கும் 2 E-க்கும் இடையே ஏற்ற இறக்கம் இருந்துகொண்டேயிருக்கும்; c என்ற புள்ளி மாருத 2 E என்ற மின் அழுத்தத்தைப் பெற்றிருக்கும். அப்பொழுது வால்வுகளின் வழியாக மின்னுேட்டம் பாய்வதில்லை. ĝiÄťEjswĜuo, @tř &qølpĝ jĥävu?ōò (Stationary state) e, g, i என்ற புள்ளிகள் முறையே 4E, 6E, 8E என்ற மாருத மின் அழுத்தங்களைப் பெற்றுள்ளன: f, h, k என்ற புள்ளிகளின் மின் அழுத்தம் முறையே 2E-க்கும் 4E-க்கும் இடையிலும் 4E-க்கும் 6E-க்கும் இடையிலும், 6E-க்கும் 8E-க்கும் இடை யிலும் ஏறி-இறங்கிக்கொண்டே இருக்கின்றது. எடுத்துக் காட்டாக, ஒரு மின்னேட்டம் i என்ற புள்ளியில் புகும் பொழுது, அங்குள்ள மின் அழுத்தம் கிறிதளவு குறைகின் றது: வால்வுகள் அம்புக்குறி காட்டும் திசையில் ஓர் எலக்ட் ரான் கற்றையைப் புக விடுகின்றன; இந்த எலக்ட்ரான்கள் மின்னூட்டத்தைச் சுமந்து செல்லுவதால், i என்ற புள்ளி யின் மின் அழுத்தம் 8E-க்குக் கீழ் மிக அதிகமாகத் தணிந்து போவதில்லை. எனவே, n படிகள் கடந்துசென்று நாம் மாற்றியின் 21-மடங்கு (2n-fold) மிக உயர்ந்தமின் அழுத்தத் தைப் பெறுகின்ருேம்; எடுத்துக்காட்டாக, தொடக்க மின் அழுத்தம் E, 200 கிலோ வோல்ட்டாக இருந்து மூன்றுபடி களே நாம் பயன்படுத்திஞல், இறுதியாகக் கிடைக்கும் நேர். மின்னூட்ட மின் அழுத்தம் 1,200,000 வோல்ட்டுகளாக அமைகின்றது.