பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அணுக்கரு பெளதிகம் படைத் தனிமமாகக் (Element) கருதினர். பார்மனேடிஸின்" கோட்பாடுகளில் ஓர் அடிப்படைத் துருவத்துவம்-இருத் g@th @swadrži gild (Being and Not-Being)—(på stuuż 5G# தாக அமைந்துள்ளது. பார்மனே டிஸும்கூட பரந்த பல்வேறு பட்ட மாற்றங்களெல்லாம் இரண்டு முரணுன விதிகள் இணைந்து இயற்றிய வினை, எதிர் வினைகளால் எழுந்தவையே என்று எண்ணினர். அனுக்ஸாகோராஸின் கொள்கை: கிட்டத்தட்ட ஒரு நூற்ருண்டிற்குப் பிறகு தேலஸைப்' பின்பற்றிய அணுக்ஸாகோராஸ்" என்பார் (அவர் கி. மு. 500இல் வாழ்ந்தவராக இருக்கலாம்) இக் கொள்கை ஒரு திட்டமான மாறிய நிலையை எய்தி அதிகமாக உலகாயத முறையில் அமைந்தமைக்குப் பொறுப்பாளராகின்ருர். அவர் முடிவிலா எண்ணிக்கையுடைய அடிப்படைப் பொருள்கள் உள்ளன என்றும், அவை தம்மொடு தாமாகச் சேர்ந்து இடைவினை இயற்றிப் பல்வேறு உலகச் செயல்களை விளைவிக் கின்றன என்றும் சங்கற்பித்துக் கொண்டார். இவர் கொள் கைப்படி அடிப்படைப் பொருள்கள் மிக அதிக அளவில் உல காயத முறையில் அமைந்த தனிமங்களின் பண்புகளைப் பெற் றுள்ளன; அப்பொருள் என்றும் நிலைபேறுடையவை என்றும், சிதைக்க முடியாதவை என்றும் அவர் கருதினர். அப்பொருள் கள் இயக்கம் பெறும்பொழுது தற்செயலாக ஒன்றுடன் பிறிதொன்ருகச் சேர்ந்து உலகிலுள்ள நிகழ்ச்சிகளில் மாற்றத் தையும் அவை தொடர்ந்து நடைபெறுதலையும் விளைவிக் கின்றன என்றும் அவர் எண்ணினர். எம்பிடாக்கிலீஸின் கொள்கை: கிட்டத்தட்ட பத்தாண்டுக்குப் பிறகு எம்பிடாக்கிலீஸ்' என்பார் மண், காற்று, நெருப்பு, நீர் என்ற நான்கு தனிமங் கள் தாம் இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருள்களின் ஆதி வேர்கள் (Prime root)-மூலங்கள்-என்ற கருத்தினைத் 8 LITriurasius Gio-Parmenides. 9 34 spoo-Thales. 1 03g946 vr Gaerr!rm Giv-Anaxagoras. I I atthejl ff#@aÈsŵ-Empeãocles.