பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கொள்கை 5 தோற்றுவித்தார்"; இவர் யவன நாட்டவர். எல்லாப் பொருள்கள் கலந்த ஆதிநிலை வேறுபாடு காணமுடியாத, ஒரு படித்தான, தனிமங்களின் கலவையே என்று இவர் கருதினர். இத் தனிமங்கள் அன்பு (Love) என்னும் தளையால் பிணைக் கப்பெற்று முடிவிலாப் பேரின்ப நிலையில் உள்ளன என்றும், பகைமை (Hate) என்ற பண்பு அவற்றைத் தனித்தனி யாகப் பிரித்து அவற்றைக்கொண்டு வெவ்வேறு நிலையிலுள்ள "வாழ்வு' (Life) என்ற நாடகத்தை நடத்தி வைக்கின்றது என்றும் அவர் எண்ணினர். தமிழ் மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: 12 இக்கருத்தை ஐம்பெரும் பூதங்கள்’ என்ற நம் நாட்டுக் கருத்துடன் ஒப்பிடுக. நிலம்தி நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்பது தொல்காப்பியம் (தொல்-பொருள்-மரபு-89). இதற்கு உரை கண்ட பேராசிரியரும் நிலனும் தீயும் நீரும் காற்றும் ஆகாயமும் என்னும் ஐம்பெரும் பூதமும் கலந்த கலவையல்லது உலகம் என்பது பிறிது இல்லாமையின்' என்று விளக்குவர். மண்திணிந்த நிலனும் நிலனேந்திய் விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுர்னிய நீரும் என்ருங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல என்பது புறம் (புறம்-2). இதற்கு அணுச்செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும், அக்காற்றின் கண் தலைப்பட்ட தீயும், அத்தீயோடு மாறுபட்ட நீரும் என ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மைபோல’ என்பது பழைய உரை. அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவுஎனப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் என்பது கம்பராமாயணம் (சுந்தர காண்டம்-காப்பு.