பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 277 வடிகட்டியின் தனிப்பட்ட பகுதிகளின் திறனைக் குறித்த தகவலேத் தரும். அங்ங்னமே, வாயு மூடியின் இரப்பர் மேலுறை நஞ்சு வாயு புகாதவாறு இறுக அடைக்கப்பெற் றுள்ளதா, இல்லையா என்று சரி பார்க்கவேண்டும்: இரப்பர் மேலுறையின் ஒரு பக்கத்தில் இந்த நஞ்சு வாயு படும்படி செய்து அடுத்தப் பக்கத்தில் ஏதாவது கதிரியக்கம் காணப் பெறுகின்றதா என்பதை உற்றுநோக்கி இது செய்யப்பெறு கின்றது. அவ்வாறு கதிரியக்கம் இருப்பது தெரிந்தால் இரப்பர் மேலுறை ஒருவாயு மூடிக்குப் பொருத்தம் இல்லை என்பது மெய்ப்பிக்கப்பெறுகின்றது. இத்தகைய சோதனை செய்யும் முறைகள் பார்ன், ஸிம்மர்" என்ற இருவராலும் விவரிக்கப்பெற்றுள்ளன; அவை நடைமுறையிலும் பயன் படுத்தப்பெற்று வருகின்றன. (WI) வேதியியலில் செயற்கைக் கதிரியக்கப் பொருள்கள் அளவறி பகுப்புத் துறையில்: வேதியியலில் கதிரியக்கப்பொருள்கள் பெரு வழக்கில் உளவு காட்டும் வழி-துலக்கிகளாகப் பயன்படுத்தப்பெறு கின்றன. முதலாவதாக, அளவறிபகுப்புத் (Quantitative. analysis) துறையிலிருந்து ஒர் எடுத்துக்காட்டினத் தரு வ்ோம். எர்பேச்சர், ஃபிலிப்” என்ற இரண்டு அறிவியலறி ஞர்கள் பொன், இரிடியம், பிளாட்டினம் என்பவற்றின் கல வையைக்கொண்டு அளவறிபகுப்பை மேற்கொண்டு முயற்சி செய்தனர். ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடால் ஆக்ஸிஜென் குறைத்தல் நடைபெற்ற பிறகு கலவையிலுள்ள 37. Lintrfor-Born, 38. offiburt-Zimmer. 39. 317s51-Philipp.