பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முல்றைப்... 297 இதுகாறும் நாம் ஆராய்ந்தவை யாவும் ஒரு வளர்ச்சியின் தொடக்க நிலைகளைப்பற்றியவையே; அதன் எதிர்கால முன் னேற்றத்தைப்பற்றி நாம் மதிப்பிட இயலாது. ஆளுல் செய்முறைப் பிரயோகங்கள் மட்டிலும் அணுக்கரு பெளதி கத்தின் மிக முக்கியமான கூறு என்று கொள்ள முடியாது: அதனுல்தான் இந்தச் சொற்பொழிவுகளில் அவை அதிகமான விவரங்களுடன் ஆராயப்பெறவில்லை; இயற்கை நிகழ்ச்சி பற்றிய அறிவின் செயமுறைப் பயன்கள் ஒரு பிற்காலப் பிரச்சினையாகின்றன. தற்சமயம், நாம் அறியவேண்டிய முக்கியமான செய்தி அணுக்கருவின் அமைப்பை அறிந்து கொள்வதேயாகும். இத்துறையில் இதுகாறும் முற்றுப் பெற்ற செய்திகளைச் சுருக்கமாக எடுத்துரைப்பதும், இன் தும் செய்ய வேண்டியவை யாவை என்பதைக் காட்டுவதுமே இந்தச் சொற்பொழிவுகளின் நோக்கமாகும். இதுகாறும் விவரித்தவை யாவும் கேட்போரிடையேயும் படிப்போரிடை யேயும் மந்திரப் பலன் போன்றனவும் கிட்டுவதற்கு அரியன வாகவும் உள்ள இயற்கை நிகழ்ச்சிகளைப்பற்றிய செய்திகளை உணர்த்துவதாகும்; அதிலும் சிறப்பாக இன்னும் அளக்கப் பெருத அவற்றின் அகவிதிகள் (Internal laws) சிலவற்றை யும் அறிவிப்பதாகும்.