பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 அணுக்கரு பெளதிகம் பெற்றது போலவே K, 1 ஐ விடக் குறைவாகவே இருந்தது (K<1), அஃதாவது, அந்த அமைப்பு ஆற்றல் உற்பத்திக்குப் பொருத்தமற்றிருந்தது. எனினும், அதன் பிறகு U, C,யும் கன நீரையும் ஒன்றுவிட்டு ஒன்று அடுக்குகளாகக் கொண்டு அமைக்கப்பெற்ற அடுக்குகளுக்குப் பயன்படக்கூடிய மிக உயர்ந்த எடு கோள்களைத் (Data) தந்தது. வெய்சேக்கரின் ஆராய்ச்சி: 1940-ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் வி. வெய் சேக்கர் என்பார் ஒரு யுரேனிய அடுக்கு யுரேனியப் பிளவுறும் விளைபொருள்களைத் தருவதைத் தவிர சதா யுரேனிய ஐசோ டோப்பையும் (யு-239) அதன் கோவையிலமைந்த உரு மாற்றப் பொருள்களையும் உற்பத்தி செய்துகொண்டே இருக் கும் என்பதைக் காட்டினர்; அன்றியும், அவர் இந்த உரு மாற்றப் பொருள்கள் கொள்கையளவில் நியூட்ரான் பிளவு றுதலைப் பொறுத்தவரையில் (Neutrom fission) யு-235இன் பண்புகளைப்போன்ற பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆகவே, பீட்டா - சிதைந்தழிதல் எண்-98 அல்லது 94 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணே யுடைய ஒரு தனிமத்தில் முடிவு பெற்றதா என்பது ஆராய்ச் சிக்குரியதாக இருந்தது: ஏனெனில் ஜெர்மானிய நாட்டில் யாதொரு சைக்ளோட்ரானும் இல்லாததால் இந்தத் தனிமங் களின் அணுக்கரு பண்புகளையோ, அல்லது வேதியியல் சிறப் பியல்புகளையோ, சோதித்தறிவதற்குத் .ே த ைவ ய | ன அளவுகளில் இப்பொருள்களைத் தயார் செய்ய முடிய வில்லை. எனினும், வி. வெய்சேக்கரின் ஆராய்ச்சியிலிருந்து செய்முறை விவரங்கள் உறுதிப்படுத்தக் கூடியனவாக இல்லாவிடினும், ஆற்றலை விளைவிக்கும் அடுக்கு அணு வெடி பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பெறலாம் என்று ஒரளவு புலயிைற்று. உண்மையிலேயே அமெரிக்கா வில் இம்முறை பேரளவில் மேற்கொள்ளப் பெற்றிருந் தது. அமெரிக்க அடுக்குகள் யு-239இன் உருவமாற்றப்