பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அணுக்கரு பெளதிகம் தாமாகச் சேர்ந்து சற்றுப் பெரிய சிக்கலான அலகாக-அஃ தாவது நீர் மூலக் கூருக"-ஆகின்றன. இப்பொழுது நாம் தனித்தனியான அணுக்களாலான ஒரு மூலக்கூறின் வடிவ கணித அமைப்பினைக் கற்பனையில் காண முடிகின்றது. அஃ தாவது, இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒர் ஆக்ஸிஜன் அணுவும் கொண்ட அமைப்பே நீர் மூலக்கூறு ஆகும். இக் கருத்து மடங்கு வீத விதியை" நேர் முறையில் புரிய வைப் பதற்குத் துணையாக உள்ளது. நீர் என்று நாம் வழங்கும் கூட்டுப் பொருள் ஆக்ஸிஜன் அணுக்களும் ஹைட்ரஜன் அணுக்களும் 1 : 2 என்ற விகிதத்தில் கலந்திருப்பதாகச் சிறப் புடன் குறிப்பிடப்பெறுகின்றது. டால்ட்டன் கொள்கையின் வளர்ச்சி: இ. பி. 1803-இல் தோற்றுவிக்கப்பெற்ற, அணுக்கள் சேர்ந்து மூலக் கூறுகளாகின்றன என்ற வடிவகணித முறை யில் விளக்கம் பெறக்கூடிய டால்ட்டனின் கொள்கை மீண் டும் வளர்ச்சி பெற்றது: அஃது ஒரு சில ஆண்டுகளில் நிரந்தர மாக நிலைநிறுத்தப்பெற்ற அறிவியல் ஒப்புக்கோளாகவும் (Postulate) மாறியது. கி. பி. 1811-இல் அவகாட்ரோ" என்ற இத்தாலிய நாட்டுப் பெளதிக அறிஞர் துணிச்சலான கருதுகோள் ஒன்றினை அறிவித்தார். அதுதான் இன்றைய அணுக்களின் வேதியியற் கொள்கைக்கு அடிப்படைக் கல்லாக அமைந்துள்ளது. அவருடைய கருதுகோளின்படி (Hypothesis) ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் அமுக்கத் திலும் சம பரிமாணமுள்ள எல்லா வாயுக்களும் சம எண் னிக்கையுடைய மூலக் கூறுகளைக் கொண்டுள்ளன. இன்றும் அக் கருதுகோள் சோதனைமூலம் மெய்ப்பிக்கப்பெற வேண் டிய நிலையிலிருந்த போதிலும், அஃது அணு-எடைகளே அறுதியிடுவதற்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. அன்றி 34 நீர் &lpouá áh.g)-Water molecule. 35 udLäg; o$$ @§6)uJ-Law of multiple proportions. 36 gaisrri Grrr-Avagadro.