பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

w போல என் சிறிய தொண்டினுக்கு ஆசி கூறியுள்ளனர் நம் அருமை ராஜாஜி அவர்கள் தமது முன்னுரையின் மூலமாக, சில ஆண்டுகட்கு முன்னர் அணுவாற்றலை நன்முறையில் பயன்படுத்த வேண்டும் என்று மேனுட்டு அரசியல் தலைவர் கட்கு செவியறிவுறுத்தும் தூதுக குழுவின் தலைவராகச் சென்ற ராஜாஜி அவர்கள் அணுக்கரு பெளதிகம்" என்ற நூலுக்கு முன்னுரை வழங்கி ஆசி கூறுவது மிகவும் பொருத்த மன்ருே? அவருடைய இந்த ஆசியை இப்பிறவியில் கிடைத் தற்கரிய பெரும் பேருகக் கருதி அப்பேற்றினை வழங்கிய பெரியாருக்கு என் நன்றி கலந்த வணக்கத்தைப் புலப்படுத் திக்கொள்ளுகின்றேன். இத்தகைய பெரியாரின் ஆசியைப் பெறுவதற்கும், என் வாழ்வில் நேரிட்ட பல இடையூறுகளைக்களேந்து ஆக்கத்துறை களில் என்னைப் பணியாற்ற ஊக்குவிப்பதற்கும் பல புதிய திருப்பங்களை உண்டாக்குவதற்கும் காரணமாக இருப்பவர் கள் காரைக்குடிக் கம்பன், அண்ணல் சா. கனேசன் அவர்கள். அவர்கள் செய்துவரும் உதவிகட்கெல்லாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும் என்றும் உரியவை. இந்த நூல் தொடக்கத்தில் ஜெர்மன் மொழியில் தோன் நியது: பிறகு ஆங்கில மொழியில் தவழ்ந்தது. அது சிறியே னேக் காரணமாகக்கொண்டு தமிழ்மொழியில் சிறுதேர் உருட்டி விளையாடுவதற்கு இசைவு தந்த அதன் உரிமையாளர் கட்கு" என் நன்றி என்றும் உரியது. காலத்திற்கேற்ற நூல்களை அணி அணியாக வெளியிட் டுத் தமிழ்ப் பணி புரிந்துவரும் தமிழ்ப் புத்தகாலயம் இந்த அறிவியல் நூலையும் மனமுவந்து ஏற்று வெளியிட்டமைக்கு அதன் அதிபர் திரு. கன. முத்தையா செட்டியார் அவர்கட்கும், நூலினை அழகுற அச்சிட்டுக் கற்போர் கைகளில் கவினுடன் தவழச் செய்த இராமன்ஸ் அச்சகத்தினருக்கும் என் உளங் கனிந்த நன்றி என்றும் உரியது. 5. Friedr. Vieweg & Sohn-Verlag, Western Germany.