பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கதிரியக்கமும் அணுக்கருவின் துகள்களும் (1) கதிரியக்கம் பளுவான தனிமங்களின் கதிரியக்கம்: எந்த ஒர் அமைப்பிலும் அதன் உட்புறத்தின் பெளதிகப் பண்புகளை ஆராயும்பொழுது ஒரு வகையில் அவை வெளியுல குடன் விளைவிக்கும் பயன்களைக் கண்டறிய முயலவேண்டும்; மற்ருெரு வகையில், இந்தச் செயல் நடைபெறும்பொழுது அவ்வமைப்பு எவ்வாறு இயங்குகின்றது என்பதைக் காட்டும் ஏதாவது ஒருமுறையில் அஃதை அணுக முயல வேண்டும். சில வற்றில் வெளித்தலையீட்டினல் அதனை அதன் பகுதிக்கூறு களாகச் சேதிக்க வேண்டிய (Dissect) இன்றியமையாமையும் நேரிடலாம். இந்த விதி அணுக்கருவிக்கும் பொருந்தும். எனவே, இத்தகைய தலையீட்டினை மேற்கொள்ளாமல் அணு வின் உள்ளமைப்பினைப்பற்றிய நாம் விரும்பும் விவரங்களைத் தரக்கூடிய அணுக்கரு நிகழ்ச்சிகள் எவையேனும் உளவா என்ற வின எழுகின்றது. சில பளுவான தனிமங்களின் கதிரி யக்கம் (ஏற்கெனவே குறிப்பிடப்பெற்ற ஒரு நிகழ்ச்சி) நடை முறையிலுள்ள ஒரு நிகழ்ச்சியாகும். இக் காரணத்தால் அதனை முதலில் ஆராய்வோம். கதிரியக்கத்தில் மூன்று தெளிவான கதிர்வீசல் வகை களைக் காணலாம் என்பதை ஏற்கெனவே நாம் ஆராய்ந்துள் ளோம். அவை ஆல்பாக் கதிர்வீசல், பீட்டாக் கதிர்வீசல், காமாக் கதிர் வீசல் என்பவை. கதிரியக்கத்தினை முதன் முத