பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

அணுவின் ஆக்கம்



கதிரியக்கம் (radioactivity): அணுச்சிதைவில் நேரிடும் பெளதிக, வேதியல் கிரியைகளின் தொகுதி. அஃதாவது கனமுள்ள ஓர் உட்கரு தானாகவே சிதைந்து வேறொரு உட்கருவாக மாறுவது.

கதிரியக்க ஓரிடத்தான்கள் (radioisotopes): வேதியற் தனிமத்தின் அணுவகைகள். கதிர் விட்டுக்கொண்டே சிதைந்தழிபவை. நிலைத்த தன்மையுடையவை அல்ல.

கரு (nucleus): உட்கரு என்றும் இதனை வழங்குவர். எல்லா அணுக்களின் நடுவிலிருக்கும் அடர்ந்த உள்ளகம். அணுவின் குறுக்களவில் பத்தாயிரத்தில் ஒரு பங்குதான் இதன் குறுக்களவு. இது ஒர் அங்குலத்தில் இலட்சங் கோடியில் ஒரு பங்கு.

கனநீரியம் (heavy hydrogen) ; இயற்கையில் கிடைக்கும் நீரியம் மூன்று வகை ஒரிடத்தான்களைக் கொண்டது.அவை புரோட்டியம் (protium), ட்யூடெரியம் (deuterium), டிரைட்டியம் (tritium) என்று வழங்கப்பெறும், இயற்கையில் கிடைக்கும் நீரியத்தில் முதல் வகை 99.98%. இந்த மூன்றின் உட்கருவிலும் ஒற்றை நேர் மின்னூட்டமும், வெளிப்புற வட்டத்தில் ஒற்றை எதிர்மின்னியும் உள்ளன. எதிர்மின்னியே அவற்றின் ஒத்த வேதியற் பண்புகளுக்குக் காரணமாகும். அவை கருக்களில் வேறுபடுகின்றன. முதல் வகை நீரியத்தின் கருவில் ஒரு நேர் இயல் மின்னிதான் உண்டு ; இரண்டாவது வகை நீரியத்தின் கரு இருநி (deuteron) என்று வழங்கப்பெறுவது ; இதில் ஒரு நேர் இயல் மின்னியும் ஒரு பொது இயல் மின்னியும் அடங்கியிருக்கும்; மூன்றாவது வகை நீரியத்தின் கருவினை டிரைட்டான் (tritor) என்று வழங்குவர் ; இதில் ஒரு நேர் இயல் மின்னியும் இரண்டு பொது இயல் மின்னிகளும் அடங்கியுள்ளன. பின்னிரண்டு வகையும் முதல் வகையைப்போல் முறையே இரண்டு மடங்கு, மூன்று மடங்கு பொருண்மையுடையனவாக-கனமாக-இருக்கின்றன. மூன்றும் சேர்ந்துதான் கனநீரியம் என்று வழங்கப் பெறுகின்றன. நீரியத்தின் ஆக்ஸைடு