பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் அமைப்பு 39

நிலையில் சுழன்றுவரும் எதிர் மின்னிகள் ஒன்றிலிருந்து படிப் படியாக 92 வரையிலும் உயர்ந்துகொண்டே போகின்றன. இதனுல்தான் அணுக்களின் வகையும் 92 ஆயிற்று. மின் னூட்ட எண்ணிக்கையின் வேறுபாடே அணுக்கள் பல வகையாகக் காணப்படுவதற்குக் காரணமாகும். மிகமிகச் சிறிதாகிய மின்சாரப் பரமானுவாம் மின்னி ஒன்று சேர்வ தால் ஓர் அணு பிறிதோரணுவாக மாறுகின்ற தன்மை நம்மை வியப்பினில் ஆழ்த்துகின்றது. -

எதிர் மின்னிகளால் விளையும் எதிர் மின்னூட்டத்தைச் சமனிலையாக்க நேர் மின்னுாட்டமும் இருக்கவேண்டும். எதிர் மின்னிகள் ஒன்றிலிருந்து 92 வரை மிகுதிப்பட்டு 92 வகையான அணுக்களைப் படைத்துவருங்கால், நேர் இயல் மின்னியும் ஒன்றிலிருந்து 92 வரை மிக்கு வருகின்றது. இந்த நேர் இயல் மின்னிகள் யாவும் அணுக்கருவில் செறிந்து அடங்குகின்றன. எனவே, அணுக்களின் பெயர்களே உருப் போட்டு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்ஜல. நேர் இயல் மின்னியின் எண்ணிக்கையைக் கொண்டே அணுக்களுக்கு 1, 2, 3, 4-என நெடுக 92 வரை சென்று பெயர் இடலாம். 92 என்ருல், 92 நேர் இயல் மின்னிகளைக் கொண்ட அணு ; அஃதாவது, யுரேனியம் எனலாம். 88 என்ருல், 88 நேர் இயல் மின்னிகளைக் கொண்ட ரேடி யம்" என்ருகும். பதியிைரம் மக்கள் வேலை செய்யும் தொழிற் சாலைகளிலும், ஆயிரம் மானுக்கர்கள் கற்கும் கல்லூரிகளி லும், பல நோயாளிகள் தங்கியிருக்கும் மருத்துவ நிலவிங் களிலும், ஊர்காவலர்களைப் பெயரிடுவதிலும் எண்களைக் கொண்டு வழங்குவதுபோன்ற முறையாகும் இது. எனினும், அந்த எண்களை வழங்குவதற்கும் அவற்றைக் கொண்ட மக்களின் இயல்புக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை. ஆனல், எண்முறை கொண்டு அணுக்களுக்குப் பெயரிடும் சடங்கில் உண்மையான தத்துவம் பொதிந்திருக்கின்றது. குறிப்பிட்ட அணுவிற்கும் அந்த அணு கொண்டுள்ள எண் னிற்கும் நேரான தொடர்பு உண்டு : உயிர்க்கு உயிரான

  • 3riq-uth-radium. * off orgusot-police constable.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/45&oldid=599306" இலிருந்து மீள்விக்கப்பட்டது