பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அண்டகோள மெய்ப்பொருள் _ ೧೩೮) என்பது முதலாக வருமிடங்களிற் கண்டுகொள்க. ஸ்ரீகீதாபாஷ்யத்திலும் ஸ்ரீ பாஷ்யகாரர் 'தேஷாம் ஜ்ஞாநீ' என்கின்ற ச்லோக விளக்கத்தில் ஞானிக்கு என்னொரு வனிடத்திற் பக்தி, மற்றை இருவர்க்குமோவெனின் தங்களிஷ்ட பலத்திலும், அவற்றிற்கு ஸாதனமாகையாலே என்னிடத்திலும் பக்தி' என்று பக்தியையே இம்மூன்றற் கும் ஏதுவாக்கி அது வித்யாஸ பலன்றருவது இவ்வித மென்றுங் கூறியருளினர். மஹா பாரதத்திலும் சதுர்விதா மமஜநா பக்தா :' (அதவிலோ ஜகாஹதா)' என்று, ஸ்ரீகீதையிற் சொல்லியபடியே, ஐச்வர்யார்த்தியை ஆர்த்தன், அர்த்தார்த்தி என இருவகைப்படுத்து மற்றை யிருவரொடுங் கூட்டி, நால் வரும் என் பக்தர்கள் எனக்கூறியுள்ளதும் காண்க. இவற். றிற் கர்மத்தையே முக்யமாகக்கொண்டு அதனடியாகப் பிறந்தஞானத் துணையாக ஐச்வர்யங்களை விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்திமார்க்கம் ஐச்வர்ய கதி என்றும், ஞானத்தையே முக்யமாகக் கொண்டு கர்மந்துணையாக ஆத்மாவை அடைய விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்தி மார்க்கம் கைவல்யகதி என்றும், கர்மஞானங்கள் துணையாக ஈச்வரனையே யடையவிரும்பி அவனேயே உபாஸிக்கும் ஏகபக்திமார்க்கம் பரமாத்மகதி அல்லது மோக்ஷகதி என்றும் நன்கு துணிந்துகொள்க.நோற்ற நோன்பிலேன்' என்னுத் திருவாய்மொழியீட்டில் நம் பிள்ளை யாசிரியர் 'ஞான கர்மங்களிரண்டுங் கூடினாற் பக்தி கூடியல்லது நில்லாது' என்று உரைத்ததனையும் தெளிய நோக்கிக் கொள்க. இதனாலன்றோ ஆளவந்தார் கீதார்த்த ஸ்ங்க்ரகத்தில்,