பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டகோள மெய்ப்பொருள் 37.

கொண்டு, மூன்றும் ஏழுமாய் அக்ஷரவொலிவடிவா நுண் ணியவாய திருமந்திரம் பத்தெழுத்துக்களையும் உலகுய்ய உதவினள். எனினும் நன்குபொருந்தும். அகார உகார மகாரமாகப் பிரிப் புண்பதுபற்றி ப்ரணவத்தை 'த்ர்யக்ஷரீ' ' த்ரிவ்ருத்' என வழங்குதலான் அஃது மூன்றாதல் தெள்ளிது. எஞ்சிய நமோ நாராயணாய' என்பது ஏழாதல் கண்டுகொள்க. அகரங்கள் தேவதை களின் வடிவாதலும் உயர்த்தியும் நோக்கி உயர்திணையாற் கூறினார். 'இசைத்தலுமுரிய வேறிடத்தான' (தொல்காப் பியம்) என்பது, இலக்கணம். இங்ஙனம் மறைத்துக் கூறியது, மறையிற் றலைசிறத்தல் பற்றியும் இதன் கெளரவம்பற்றியும் தாய்மைபற்றியும் தெய்வத்தன்மை பற்றியும் எனக் குறிக்கொள்க. இதன் அநுக்ரக விசேடம் ப்ரஹ்லாதாழ்வான் முதலியோரிடம் நன்கு காணலாம். அக்ஷரங்கள் தெய்வவடிவே என்பதும் அவ்வவ் வக்ஷரங்கட்கு அதிதெய்வம் இவையென்பதும் அக்னிபுராணங் கூறிற்று. தமிழிலும் பாட்டியலிற் காண லாம். மந்த்ரகாரிணி ஸரஸ்வதி என்பதுபற்றி இவ்வாறு கூறப்பட்டது. 16. அவள் இவள் உவள் என அறிதல்-இவ்வாறு இருடிகளையும் திருமந்த்ரத்தையும் உலகுய்யப் பயந்த அத்தகையள் ஸரஸ்வதியென இலக்குமியென ஒருபடியாகக் துணிதல் எ-று. உவள்-உகாரார்த்தமா யுள்ளவள். இலக்குமி என்பது திருமந்த்ரார்த்தத்தால் ஸம்ப்ரதாயஸ்தர் பலரும் நன்கறிவர். அவள் ஒழிந்த இவள் ஸரஸ்வதி என் பது தெள்ளிது. இது பிரமன் மகளாதலாலும் நன்கறிக தாம். உபகாரஸ்ம்ருதி செய்யவேண்டுதலின் அறிதல் இன்றியமையாதென்று கருதிக் கூறினர். பத்தெழுத்தினையும் உலகில் வெளியிட்ட இருடியர் இப்பதின்மர் எனக்