பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 அண்டகோள மெய்ப்பொருள்

கருதினரோ என ஊகிக்கவும் இடனுண்டு. இருடி, மந்த்ரம், தெய்வம் மூன்றும் ஸர்வதா உபாதேயமாகக் கடவன வென்பது நம் பெரியோர் திருவாக்காதலான், அவற்றையே இவரும் ஞாபிக்கின்றார் எனக் கொள்ளலுமாம். 17. 'துவளறு காட்சிப் புலவரது கடனே. துவட்சியற்ற அறிவினாற் புலவரென்று பெயர் சிறந்தாரது கடப்பாடே யாம் எ-று.புலவரது கடன் என்றது, மஹாபாரதத்தில் வித்வத் ஸம்ரக்ஷணம்' என ஒர் பகுதியுண்டு-அதன்கண், வித்வான் அஷ்டாக்ஷர ஜபபராயணனாக இருத்தல் கூறப்பட் டுள்ளது. அவ்வுண்மையை அச்சங்கப்புலவர்க்கு அறிவுறுத்து வாராய்க் கடன் என்றுரைத்தருளினாரென்க. துவளல்-வாடுதல். துவளறு காட்சி - யதாவஸ்திதஞானம். அஃதாவது பொருளியல்புள்ளவாறுணரும் நுண்ணறிவு. புலவர் என் புழிப் புலம் அறிவாதலிற் காட்சிப் புலவர் என்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது.அன்றியும் இச்சங்கப்புலவர் ஸரஸ்வதி அம்சமென்ப வாதலான் அவள் பயந்த இருடியரையும், இலக்குமியின் வடிவாகிய அவளே பயந்த திருமந்த்ரத்தையும், அது கூறும் வாசுதேவ தருவையுமல்லது தஞ்சம் வேறில்லையென்றும் உய்த்துணர வைத்தவாறாம். 'பரமாத்ம சக்தி பலபல படியாகக் கேட்கப்படுவது' என்பது வேதமாதலின்,அவள் இலக்குமியாகவும் ஸரஸ்வதி யாகவும் நூல்கள் கூறுமென் றுணர்க. நாமங்கையே, நாவினு ணின்று மலரு ஞானக் கலைகளுக்கெல்லாம் ஆவியும் ஆக் கையும் இறைவன்றானே (திருவாய் 1, 9, 8) என்று ஞாபித்து, அவ்விறைவனையும் அவள் பரிசுத்தத்தையும் பாடுக என்று அருள்செய்தாள் எனக் கருதி உபகாரஸ்ம்ருதி பண்ணிய பெரியாரும் நம் ஆழ்வார்களிலுண்டு. 'நாம்பெற்ற நன்மையு நாமங்கை நந்நெஞ்சத் தோம்பி யிருந்தெம்மையோதுவித்து-வேம்பின்