பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அண்டகோள மெய்ப்பொருள்

செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
15. ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன்
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.

இது 'மயர்வற மதிநலீம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாங்கொண்டு தமிழா ராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய திருப்பாசுரம் என் பது, கூடலழகர் புராணத்தில் "அண்டகோ ளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சட கோபர் என வருங் கடவுள் வணக்கப்பாடலால் (13) துணிய லாகும்.

இதன் பொருள்.

1. அண்டகோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத் தினுடைய அரிய அணு வளர்ந்து என்றவாறு.

ஆகல்-வளர்தல் : பரிணமித்தல்; வளர் தற்குக் காாலா மாகிய ஊழினை " ஆகலூழ்" (திருக்குறள்--312) என்பதனா லறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு "கொண்டது அணு என்பது வடநூற் கொள்கை (பாகவதம்). அண்டகோளத்து ஆரணு-அண்டகோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதி யம்சமாகிய பாமாணு, அஃது ஆகி என்றது அஃது அண்ட கோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என் றால் ஆலின் வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையுங் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதிநிலை