பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10




தென் முனை உலகிலேயே அதிக வெப்பத்தை பெறும் இடமாகும்; மிகக் குளிர்ந்த இடமும் ஆகும்.

நில இயல்நூல் ஆண்டின் பொழுது சோவி யத்து ஆராய்ச்சியாளர்கள் அண்டார்க்டிக்கில் வாஸ்தோக் என்னும் நிலையத்தில் வெப்ப நிலை யைப் பதிவு செய்தனர். அவ்வாறு பதிவு செய் தது 1958 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடை பெற்றது. இவ்வெப்ப நிலையே உலகில் மிகக் குறைந்த வெப்ப நிலையாகும். அதன் அளவு –87.4°C (–126°F).

இவ்வெப்ப நிலையில் எஃகுக் குழாய்களைச் சம்மட்டியால் அடித்துக் கண்ணாடியை உடைப் பது போல் உடைக்கலாம். இங்குத் திரவ உணவைச் சமைக்கவே ஐந்து மணி ஆயிற்று!

தென் முனை அதிக வெப்பத்தை டிசம்பர் மாதத்தில் பெற்ற போதிலும், அவ்வாற்றலில் 89 பங்கு அளவு, பனி உறையினால் பிரதிபலிக்கப் படுகிறது. இதனால், வெப்ப இழப்பு உண்டாகிறது.

பனிக்கட்டியின் மேல் அடுக்கில் நேர்த்தி யான மணல்துளிகள் படிந்துள்ளன. இதனால், வெப்பம் உறிஞ்சப்படுதல் மெதுவாக நடைபெறு கிறது. இந்த அடுக்குக் கடினமாக இருப்பதால், அதன் மீது அடிச்சுவடுகள் படியாமலே கடக்க லாம். அப்படி அடிச்சுவடுகள் படிந்தால், அவை