பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அன்றைய கிரேக்க சிந்தனை வளம்

அக்காலத்தில் கிரேக்க நாடு தத்துவக் களஞ்சியமாகத் திகழ்ந்து வந்தது. புதிய புதிய சிந்தனைகள், கோட்பாடுகள் சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்களால் உருவாக்கப்பட்டு மக்கள் மத்தியிலே உலவவிடப்பட்டிருந்தன.

கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சாக்ரட்டீஸ் ‘தர்கா’

நான் அண்மையில் கிரேக்க நாடு சென்றிருந்தபோது அதன் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இச்சமயத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏதென்ஸின் மையப் பகுதியில் அமைந்துள்ள குன்றின் மேல் சிதிலமாகிக் கிடக்கும் ‘அக்ரப்பொலிஸ்’ எனும் இடத்தில் பழம்பெரும் கிரேக்கக் கோயிலோடு கூடிய இடிபாடுகளைக் கொண்ட நினைவுச் சின்னங்களைக் கண்டு களித்தேன். அப்போது என்னை அங்கே அழைத்துச் சென்ற கிரேக்க நண்பரைப் பார்த்து, “சாக்ரட்டீசைச் சிறை வைத்திருந்த இடம் எங்கே உள்ளது? அதைப் போய் பார்க்க முடியுமா?” எனக் கேட்டு அங்கே செல்ல வேண்டும் என்ற என் விருப்பத்தை வெளிப்படுத்தினேன். அதைக்கேட்ட அவர் மலர்ந்த முகத்துடன் “சாக்ரட்டீஸ் சிறை வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையை மட்டுமல்ல; அவரது ‘கப்ர்’ மீது அமைக்கப்பட்டுள்ள ‘தர்கா’வுக்குச் சென்று இஸ்லாமிய முறைப்படி நீங்கள் “ஜியாரத்” தும் செய்துவரலாம்,” எனக் கூறிச் சிரித்தார். இதைக் கேட்டபோது எனக்கேற்பட்ட ஆச்சரியத்தைவிட குழப்பமே அதிகமாக இருந்தது.

“சாக்ரட்டீசுக்குத் ‘தர்கா’வா? இஸ்லாமிய முறைப்படி ஜியாரத்தா?” என வியப்பு மேலிட்ட வனாகக் கேட்டுஎன் ஐய உணர்வை வெளிப்படுத்தினேன் இதைக் குறிப்பாக