பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

விரிந்து முனைப்புடன் வளரலாயிற்று. இஸ்லாமியர்கள் போற்றி வளர்த்த கணிதவியல் வளர்ச்சியின் விளைவாக அறிவியலின் அனைத்துக் கூறுகளும் செம்மையாக உருவெடுக்கலாயின. அத்துடன் கணிதவியலின் மறைமுகச் செல்வாக்குடன் கட்டிடக் கலை, இசைக்கலை, ஏன் — கவிதைக் கலை போன்ற பல்வேறு கவின் கலைகளும்கூடபுதிய பரிமாணத்துடன் வளர்ந்து வளம் பெறலாயின.

எண் குறியீடுகளின் தாயகம் இந்தியாவே

இச்சமயத்தில் கணித எண் குறியீடுகளின் வரலாற்றைப் பற்றிய ஒரு சிறு குறிப்பைக் கூறுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

கணிதவியல் இலக்கங்களான எண் குறியீடுகளைப் பொருத்தவரை அவைகளின் பிறப்பிடம் இந்தியாவாகும் என நீண்ட காலமாகவே கூறப்பட்டு வருகிறது இந்தியாவில் சிறந்த முறையில் விளங்கி வந்த எண் கணித முறை கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் ஆசியா மைனர் பகுதிக்குப் பரவியது. பின்னர் அங்கிருந்து எகிப்துக்கும் ரோம நாட்டிற்கும் கிரேக்கத்துக்கும் பரவி, பல்வேறு மாற்ற திருத்தங்களைப் பெற்றது. பின்னர் அரபு நாட்டு முஸ்லிம்களால் சுவீகரிக்கப்பட்டு மாபெரும் மாற்றங்களைப் பெற்றது. அரபு மொழி வரிவடிவ அமைப்புகளுடன் துவங்கத் தொடங்கியது

அதன் பின் அவ்வெண் கணிதம் முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்ட ஸ்பெய்ன், கான்ஸ்டாண்டிநோபிள் முதலான ஐரோப்பிய நாடுகளின் வாயிலாக மேற்கு ஐரோப்பாவெங்கும் பரவியது. இவ்வெண் கணித முறையே அறிவியல் வளர்ச்சிக்கான உந்து விசையாகியது. பிறகு கணிதவியலில் எண்ணற்ற மாற்றங்களும் புதிய புதிய பிரிவுகளும்