பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

பொருளைக் கொண்டு அழுத்துவர். நுண் துளை வழியே நீர் வெளியேறிய பின் அந்த ஈரத்தாளை சற்று உலர்த்திய பின் வெளியே எடுத்துக் காய வைப்பர். அதன் பிறகே தாள் பயன்படுத்தக் கூடியதாக அமையும்

மூங்கிலுக்கு மாற்றான தாவர மூலப்பொருட்கள்

ஆனால், காகிதத தயாரிப்புக்கு மூலப்பொருளான மூங்கில் அரேபியப் பகுதியில் அரிதாதலின் வேறு முறைகளைப் பின்பற்றி காகிதம் செய்ய அரபு நாட்டு முஸ்லிம்கள் பேரார்வம் கொண்டனர். இதற்காக ஆய்வாளர்கள் முனைப்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாகப் புதிய முறையில் மூங்கிலுக்குப் பதிலாக வேறு சில தாவரப் பொருட்களைப் பயன்படுத்திக் காகிதம் செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினர். இச்செய்முறை செலவு குறைந்ததாகவும் தரம் மிகுந்ததாகவும் இருந்தது. விரைவாகவும் அதிக அளவிலும் காகிதம் தயாரிக்க இயன்றது விரைவிலேயே இப்புதிய முறையில் காகிதம் தயாரிக்கும் கலை சாமர்கண்ட், பாக்தாது போன்ற இடங்களுக்கும் பரவியது. பின்னர், படிப்படியாக அரபு நாடுகள் அனைத்துக்கும் விரைந்து பரவியது. கல்வியும் கருத்துப் பரவலும் விரைவு பெற்றன. ஆய்வுச் செய்திகளும் செய்தி தொடர்புகளும் புதிய பரிமாணத்தை அடைந்தன. பெருமளவில் நூல்கள் வெளிப்பட ஏதுவாயின.

சாமர்கண்டில் தயாரிக்கப்பட்ட காகிதங்கள் மிக உயர்தரமாக இருந்ததாக ஒரு குறிப்புக் காணப்படுகிறது. கி.பி. 794இல் பாக்தாத் நகரில் பெரும் காகிதத் தொழிற்சாலை ஒன்று இருந்தது.

காய்கறிகள் மூலம் உயர்தரக் காகிதம்

ஜெஹ்மா எனும் நகரில் காய்கறிகளிலிருந்து உயர்தரக் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்