பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அஞ்சா நெஞ்சன் 103

போர் கடுமையாக நடைபெறும்போது அநுமன் அற்புதமாகச் சாரி திரிவான், இராமபிரானின் அம்பைக் காட்டிலும் விரைந்து செல்வான்; மனோவேகத்தைவிட வேகமாக இயங்குபவன். ஒர் இமைப்பொழுதில் இவ்வுலகத்தில் உள்ளான் என்று கருதினால் அடுத்த நொடியில் ஆகாயத்தில் இருப்பான், தும்பை மாலை சூடி வந்து பொருகின்ற இராவணனின் முகந்தோறும் தோன்றுவான்; வஞ்சகர்களின் கண்கள்தோறும் திரிவான்." (ஆ) கும்பகருணனுக்கும் இலக்குவனுக்கும் கடும்போர் நிகழ்கின்றது. கும்பகர்ணன் இவர்ந்து வரும் தேர் விசாலமான தேர்த்தட்டினையுடையது; காற்றினும் மனத்தினும் கடிய வேகமுடையது; கொடிய சிங்கங்கள் இடைவிடாமல் முழங்கி நிற்பது, மேரு மலையைப் போன்ற பெருவடிவினது. அதனைக் கண்ட அநுமன் இலக்குவனைத் தன் தோளில் ஏறிக் கொள்ளுமாறு வேண்டுகின்றான். இளையவள்ளலே ஏறுதி தோள்மிசை என்கின்றான்." இளைய பெருமாளும் அங்ங்னமே ஏறிக்கொள்ளுகின்றான். "ஏறி னான்.இளங் கோளரி

இமையவர் ஆசி கூறி னார்;எடுத்து ஆர்த்தது வானரக் குழுவும் நூறு பத்துடைப் பத்தியின்

எறிபரி பூண்ட ஆறு தேரினும் அகன்றது.அவ்

அநுமன்றன் தடந்தோள்" " (இளங்கோளரி - இலக்குவன் இமையவர் - தேவர்; ஆசி - வாழ்த்து; நூறுபத்து ஆயிரம் ஆறு - வழி)

இலக்குவன் மாருதியின் தோளில் ஏறியதும் இமையவர் ஆசி கூறுகின்றனர். வானரக் கூட்டம் ஆரவாரம் செய்கிறது. வரிசையாக விரைவுள்ள ஆயிரம் பரிபூண்டு போர்க்கள வழி செல்லும் கும்பகருணனின் தேரினும் அவ்வதுமனின் தடந்தோள் அகன்றதாகின்றது.

64. யுத்த முதற்போர் - 232 65. யுத்த. கும்பகருனன் வதை - 230 66. யுத்த. கும்ப்.கருணன் வதை - 23