பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 அண்ணல் அநுமன்

வாய்ப்பு வரும்போது தானாகவும் போரிடுவான். இவற்றைக் காண்போம்.

(1) கும்பகருணனுடன் அங்கதன் போரிடுகின்றான். அங்கதன் வயிரத்தண்டு ஒன்றைக் கும்பகருணன்மீது எறிய அது கும்பகருணன்மீது பட்டவுடன் பல துண்டங்களாகச் சிதறுகின்றன. உடனே அதன் பெரிய கைகளை உயரத் தூக்கிக் கும்பகருணனைப் பற்றிக்கொண்டு, 'இவனை இறப்புறச் செய்வேன் என்று குனிந்தபோது கும்பகருணன் சினந்து தன் கையினாற் குத்த, அங்கதன் அதனைத் தாங்க மாட்டாது, அறிவு தப்பிக் கீழே விழுகின்றான். அச்சமயம் மாருதி இமைப்பின் வந்தான்'; அங்கதன்மீது சூலத்தை எறியத் தொடங்கியபொழுது, அநுமன் குன்றமொன்றை அவன் நெற்றிமீது "சுரிக்க வீசித் தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான்', கும்பகருணன் அந்த மலையை அநுமன்மீது திருப்பி "வீசித் தோள் கொட்டி யார்த்தான்'; அடுத்து மாருதி வேறொரு மலையை எடுத்து இம்மலையைத் தாங்கு பார்க்கலாம் என்ற சவாலுடன் வீசுகின்றான். அதனைக் கேட்ட அரக்கன் மறுமாற்றமாக "நீ வீசும் மலையை ஏற்கையில் சிறிதளவாவது சோர்வை அடைந்தேனானால் தோற்றவனாவேன்” என்று உரைக்கின்றான். கும்பகருணன் அம்மலையை ஏற்க அது பொடிப்பொடியாய் உதிர்ந்து போகின்றது' அரக்கனின் வலிமை கண்டு அநுமன் அப்பால் ஏகலானான்.

(2) பிறிதொரு சமயம் கும்ப கருணனுக்கும் சுக்கிரீவனுக்கும் நடைபெற்ற போரில் கும்பகருணன் சூலமொன்றனை அவன்மீது வீச, அநுமன் அதனை எட்டிப் பிடித்து முடித்தெறிகின்றான். அது முரிந்ததனால் ஏற்பட்ட ஒசை, இராமன் மிதிலையில் சிவதனுசை முரித்தபோது ஏற்பட்ட ஒசையை ஒத்திருக்கின்றது” கும்பகருணன் அநுமன் திறமையை வியந்து அவனை அறைகூவ அவன் மறுத்து,

75. யுத்த. கும்பகருனன் வதை - 196 76. யுத்த. கும்பகருனன் வதை - 197 77. யுத்த. கும்பகருணன் வதை - 198 78. யுத்த. கும்பகருணன் வதை - 200 - 202 79. யுத்த. கும்பகருனன் வதை - 260, 261

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/107&oldid=1361254" இலிருந்து மீள்விக்கப்பட்டது