பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குணக்குன்றன் 149

இப்போது இலக்குவனனின் நிலையைக் கம்பன்,

“தாமரை வதனம் சாய்த்துத்

தனுநெடுந் தரையின் ஊன்றி மாமியர் குழுவின் வந்தான்

ஆமென மைந்தன் நிற்ப”* (வதனம் - முகம்; தனு - வில்) என்று காட்டுவான். தரையை நோக்கியிருந்த இளைய பெருமாளை நோக்கி, தூமனம் நெடுங்கண் தாரை", "பெருமானே, அளவற்ற காலம் தவம் செய்த மகிமை உண்டானாலன்றி உன் வரவு இந்திரன் முதலானவர்களாலும் அடையத்தக்க தன்மையையுடையதன்று. அத்தன்மையனான நீ எம் மனைக்கு வரப்பெற்றது. நாங்கள் எல்லையில் காலம் நோற்றிருந்த பெருநோன்பின் பயனேயாக வேண்டும்; இதனால் எம் வினை தீர்ந்து உய்ந்தோம். இதனினும் மேம்பட்ட உறுதி எமக்கு இல்லை' என்று கூறினாள். 'இசையினும் இனிய சொல்லாள் தொடர்ந்து, "நீ உக்கிரமும் விரைவும் கொண்டு வரும் காரணம் அறியாது வானர சேனை அஞ்சிக் கலங்கியது; இராமபிரானைப் பிரியாத நீ இன்று பிரிந்து தனியாய் ஈண்டு எழுந்தருளியது என்ன காரணம்? என்று வினவினாள்.

வினவியவர் யார் என்று சிறிது ஏறிட்டுப் பார்க்கின்றான், இலக்குவன். கவிஞன் கூறுவான் :

"ஆர்கொலோ உரைசெய் தாரென்று

அருள்வரச் சீற்றம் அஃகப் பார்குலாம் முழுவெண் திங்கள்

பகல்வந்த படிவம் போலும் ஏர்குலாம் முகத்தி னாளை

இறைமுகம் எடுத்து நோக்கித் தார்குலாம் அலங்கல் மார்பன்

தாயரை நினைந்து நைந்தான்."" (அருள் - கருணை, சீற்றம் - கோபம், அஃக - குறைய பார் - பூமி, படிவம் - தோற்றம் ஏர் - அழகு

26. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 49 27. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 51