பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சொல்லின் செல்வன் 33

ஒர் அம்பு கொண்டு துளைக்கும்படி ஏவச் செய்வதேயாகும்!" என்றான் (83).

இந்த அறிவுரை யோசனையாலும் அது மனது சொல்லாற்றலை அறியலாம்; அவன் சொல்லின் செல்வன் என்பதையும் தெளியலாம்.

(6) வாலிவதை சுக்கிரீவன் ஆட்சி ஆகியவற்றிற்குப் பிறகுதான் அனைத்தும் செய்ய வேண்டுவன எனல் : இராம லக்குமணர்கள் கிட்கிந்தையிலிருக்கும்போது ஒருசமயம் சுக்கிரீவன் பிராட்டியின் திருவாபரணங்கள் அடங்கிய ஒரு முடிச்சைக் கொண்டுவந்து கொடுக்கின்றான். அந்த ஆபரணங்களைக் கண்ணுற்ற இராமன் மூர்ச்சையடை கின்றான். சுக்கிரீவன் தெளிவித்தபின் இராமன் கூறுவது : "அன்பனே, நீ தேற்றியதனால் துன்பத்தை ஒருவாறு தணித்துக்கொண்டேனேயன்றிப் பிழைக்கக் கடவேனோ? இப்பழிதீர மரணம் ஒன்றே வழி என்று கூறியவன், ஆனால், உனது குறையை நிறைவேற்றாமல் மரணத்தை அடையேன் என்று கூறுகின்றான்." இச்சமயத்தில் அநுமன் பேசிய பேச்சு உள்ளத்தை உருக்குவது; சொல்லின் செல்வன் என்பதை நிலைநாட்டுவதாக அமைகின்றது. மாருதி வணங்கிப் பேசுகின்றான். ‘அடியேன் இப்போது கூறவேண்டுவது ஒன்று உள்ளது. அதனை உணர்ந்து திருவுள்ளம் வைத்துக் கேட்பாயாக" " என்று தொடங்குகின்றான்.

“பெருமானே, பிராட்டி இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்குப் பலர் பல இடத்து ஏக காலத்தில் தேட வேண்டுமாதலால்,

" கொடுந்திறல் வாலியைக் கொன்று கோமகன் கடுங்கதி ரோன்மகன்

ஆக்கிக் கைவளர் நெடும்படை காட்டினால்

அன்றி நேடரிது.”*

14. கிட்கிந். கலன்காண் - 26. 15. கிட்கிந். கலன்காண் - 27, 16. கிட்கிந், கலன்காண் - 28.