பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 அண்ணல் அநுமன்

எழுவாயால் தொடங்கினால் பயனிலையால் முடிப்பதற்குள் - ஒருசில விநாடிக்குள் - ஆயிரம் ஐயங்கள் தோன்றலா மல்லவா? அவற்றைத் தவிர்த்தற்பொருட்டே கண்டெனன் என்று தொடங்கினான் என்பது சிந்தித்து அநுபவிக்கத் தக்கது.

இங்ங்னம் இலக்கண நூற்பா போல் சுருங்கக் கூறியதைப் பின்னர் இருபத்து மூன்று கவிதைகளால்” வகுத்துக் கூறுகின்றான். அவற்றுள் சிலவற்றை அநுமன் வாக்காலேயே ஈண்டுத் தருகின்றேன்.

"உன்பெருந் தேவி என்னும்

உரிமைக்கும் உன்னைப் பெற்ற மன்பெரும் மருகி என்னும்

வாய்மைக்கும் மிதிலை மன்னன் தன்பெருந் தனயை என்னும்

தகைமைக்கும் தலைமை சான்றாள் என்பெருந் தெய்வம் ஐயா

இன்னமும் கேட்டி என்பான்" (59) (தேவி - மனைவி, உரிமை - தகுதி, மருகி மருமகள், வாய்மை - உண்மை, தனயை - மகள்; தகைமை - தன்மை; தலைமை - சிறப்பு: தெய்வம் - கடவுள்)

"உன்குலம் உன்ன தாக்கி

உயர்புகழ்க்கு ஒருத்தி யாய தன்குலம் தன்ன தாக்கித்

தன்னைஇத் தனிமை செய்தான் வன்குலம் கூற்றுக்கு ஈந்துஅவ்

வானவர் குலத்தை வாழ்வித்து என்குலம் எனக்குத் தந்தாள்

என்இனிச் செய்வது எம்மோய்.” (6) (உன்குலம் - இரகு வமிசம் தன் குலம் - தான் பிறந்த குலம் தனிமை செய்தான் - தனித்திருக்கும்படி செய்த இராவணன், வன்குலம் - வலிமையான குலம் (இராக்கதர் குலம்): கூற்று - யமன், வானவர் - தேவர்.

23. சுந்தர - திருவடி தொழுத. 59-82 : சந்தர்ப்பத்துக்கேற்றவாறு கம்பனும் யாப்பை மாற்றிக்கொள்வதையும் கண்டு மகிழ்கின்றோம்.