பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிந்தனைச் செம்மல் 59

சிறை வைத்தலோ, போர் செய்து வெல்லுதலோ இவ்விரண்டனுள் ஏதேனும் ஒன்றைச் செய்தலே தகுதி: ஒன்றுமே செய்யாது வாளா திரும்பிச் செல்வது தகுதியுடையதாகாது என்று கருதுகின்றான். (3)

பழிக்குப் பழி வாங்குமாறு இராவணனைச் சிறை வைத்தல் அல்லது வெல்லுதலைத் தான் செய்வதும் மாவீரனான இராமபிரானது பெருமைக்குக் குறைவு தருவதேயாகும்; அதுவும் கிடக்கட்டும் என்று அச் செயலையும் கைவிட்ட அநுமன், இராவணனைச் சேர்ந்தவர்களாகிய அரக்கரை முரியடித்து, அவன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவனது அரசமாதேவியான மண்டோதரியின் கூந்தலைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய்ச் சிறை வைத்துப் பழிக்குப் பழி வாங்கினால் மாத்திரம் தனது செய்கை சிறந்ததாகும் என்று கருதுகின்றான். (4)

பிராட்டியைக் கவர்ந்து சிறைவைத்தது பெருங்குற்றம் எனக் கூறுகின்ற நாம், அவ்விராவணனது துணைவியைத் துரக்கிக்கொண்டு வந்து சிறைவைத்தல்தான் நியாயமாகுமா என்ற சிந்தனை கொண்ட அநுமன், நாம் இப்போது இவ்வரக்கர்களையெல்லாம் வலியப் போருக்கு அழைத்து வருத்தித் துரத்துவதன் மூலமாகக் காகுத்தனின் வலிமைச் சிறப்பைக் காட்டுவதே செய்தொழில்; வேறு வகையாக ஆலோசிப்பதில் பயன் இல்லை என உறுதிசெய்து, 'இவ்வரக்கர்களைப் போருக்கு இழுப்பதற்கு வழி யாது? என்று சிந்திப்பவனாகின்றான் (5).

"அசோக வனமாகிய இச்சோலையை அழித்தால் அக்காரணம்பற்றித் தன் மேல் சினம் கொண்டு போருக்கு வருகின்ற அரக்கர்களைக் கொன்று குவித்துக்கொண்டே வந்தால், இராவணனே என் கண்ணுக்கு எதிர் காண நேர்வான்; அச்சமயத்தில் அவன் பத்துத் தலைகளையும் பனங்காய்போல் உருட்டினால் தன் மனத்துயர் தணியும்; அதன் பிறகு மீண்டு செல்வதே மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் என்று அநுமன் உறுதிசெய்து சோலையை அழிக்கத்