பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 அண்ணல் அநுமன்

அதுமன் கொண்ட பேருருவத்தின் சிறப்பை,

"கண்டிலன் உலக மூன்றும்

காலினால் கடந்து கொண்ட புண்டரி கக்கண் ஆழிப்

புரவலன் பொலங்கொள் சோதிக் குண்டல வதனம் ஒன்றால்

கூறலாம் தகைமைத் தொன்றோ?' " (கடந்து - அளந்து புண்டரிகம் - செந்தாமரை, ஆழி - சக்கரப்படை) என்று மேலும் கூறுவான். திரிவிக்கிரமாவதாரம் செய்த திருமாலான இராமனாலே பேருருவம் கொண்ட மாருதியின் திருமுகத்தைக் காணமுடியவில்லை என்றால், அவ் வுருவத்தின் சிறப்பை நம்மால் எவ்வாறு எடுத்துச் சொல்ல முடியும் என்கின்றான், கவிஞன். இஃது அநுமனின் இரண்டாவது பேருருவம்.

(3) சுக்கிரீவன் கட்டளைப்படி தென்திசை சென்ற வானரர்கள் ஒரு பாலைவனத்தைக் காண நேரிடுகின்றது; வெப்பந்தாங்க முடியாமல் அங்குக் காணப்பெற்ற ஒரு பிலத்தினுட் புகுகின்றனர். அஃது இருள் செறிந்திருந்தமை யால் அநுமனது வாலைப் பற்றிக்கொண்டு நடக்கின்றனர்; ஒரு பட்டணத்தை அடைகின்றனர். அங்குத் தவமே உருவெடுத்தாற் போன்ற சுயம்பிரபை என்ற ஒரு பெண்ணைக் காண்கின்றனர். வானர வீரர்கள் அவள் தவ வடிவைக் கண்டு வணங்குகின்றனர். இவள் பிராட்டியாக இருக்கக்கூடுமோ எனவும் ஐயுறுகின்றனர். அநுமன் இராமன் கூறிய அடையாளங்களைக் கருத்திற்கொண்டு அவள் பிராட்டி அல்லள் என்று அவர்கட்குத் தெளிவிக்கின்றான்.

சுயம்பிரபை அவர்களை இராம தூதர்கள் என அறிந்து தனது சாபம் நீங்கும் காலம் நெருங்கிற்றென்ற காரணத்தால்

5. கிட்கிந்தை - அதுமப். - 35

6. கிட்கிந்தை - பிலம்புக்கு - 48

7. இந்திரனால் ஏற்பட்ட சாபம். பிலம் என்ற நகரம் மயனது தவத்தை மெச்சி நான்முகனால் அவனுக்கு அளிக்கப்பெற்றிருந்தது.