பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 408. நம்பிக்கையும் நற்பயனும்

அண்ணாமலைச் செட்டியார், தில்லை நடராஜப் பெருமான் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் - ஆழமான பக்தியும் கொண்டவர். அந்த ஆலய நலனில் அக்கறை கொண்டு பல அறப் பணிகளைச் செய்தவர்.

ஒரு சமயம் -

சிதம்பரம் கோயிலில் சிறிது காலமாகப் புனைந்து கொண்டிருந்த சமயச் சண்டை பெரிய உருப்பெற்றது. தில்லையில் நடராஜருக்கு அர்ச்சனை செய்யும் தீகூகிதர்களுக்கும்-

அங்குள்ள கோவிந்த ராஜப் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யும் பட்டாச்சாரியார்களுக்குமிடையே, பல ஆண்டு காலமாகத் தீவிர பகையும் பூசலும் மேலோங்கி நின்றது.

சிதம்பரத்தில், நடராஜர் உருவச் சிலையும்; கோவிந்த ராஜப் பெருமாள் விக்கிரகமும், அருகருகே இருந்தாலும், திசைகள் திரும்பி -

ஒன்று கிழக்கு முகமாகவும்-
ஒன்று தெற்கு முகம் நோக்கியும்
காட்சியளித்துக் கொண்டிருந்தது.

இரு விக்கிரகங்களையும், ஒருமுகப்படுத்தி – ஒரே திசையை நோக்கி வைத்தால் பக்தர் ஒருசேர தரிசனம்