பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரார்த்தனை

51


அவனுக்குக் கூலி கொடுக்காமல் போவாளா” என்று தாயம்மாள் மிராசுதாரின் மகனைத் திட்டுவாள்; காளியைப் பிரார்த்திப்பாள். அவன் தலையிலே இடியா விழுந்தது! பக்கத்து ஊர் மிராசுதாரின் ஒரே மகளைக் கலியாணம் செய்து கொண்டான். அந்த மிராசும் இவன் தலையிலே விழுந்தது. சர்க்கார் வேறு அவன் தலையிலே ஒரு ‘ராவ்பகதூரை’ விழ வைத்தனர். கோயில் குருக்கள் அந்தச் சுற்றுப் புரத்திலே, “மலையப்பன் மகா பக்திமானன்றோ,” என்று பிரசாரம் செய்தார். எந்தத் திருவிழாவுக்கும் மலையப்பன் பிரசன்னம்! தவறிய தாயம்மாள்போல் வேறுஎத்தனையோ தையல்கள் உண்டே, அவர்கள் இந்தத் ‘தர்மப்பிரபு’ வின் நேசத்தைப் பெறுவார்கள். அந்தச் சமயத்திலே, அந்தக் கோயில் ஐயர்கள், இந்தக் காரியத்துக்கு உளவு, உதவி. இது என்ன கேவலமா என்ன? சாட்சாத் சிவபெருமானே சுந்தரருக்கும் பரவைக்கும் தூது போனாராமே!

தாயம்மாளின் விபசார வாழ்வின் வேதனைகள் கூறவும் முடியாது. கூறினால் என்ன? யார் பரிதாபப்படுவார்கள்: ஒருவரிருவர் விலாசம் விசாரிப்பார்கள்; வேறென்ன நடக்கும்! அன்னம் , வளர்ந்து பருவமடைந்தாள்: தாயம்மாள் உலகிலே உழன்று அலுத்தாள். ஒரு ஓட்டை வீடு, ஒரு ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள நகை, உடலிலே பலவகையான ரோகம், உள்ளமோ எரிமலை, இந்நிலையில் இருந்த தாயம்மாள், அன்னத்தை எவனுக்காவது கட்டிக் கொடுத்துவிட வேண்டுமென்று கலியாணத் தரகர்களிடம் கூறினாள். வழக்கப்படி காளியை வேண்டினாள். விபசாரியின் மகளைக் கட்டிக்கொள்ள எவன் சுலபத்திலே இசைவான்? ஆனால், அன்னத்தின் அழகோ அவ்வளவு சுலபத்திலே, ‘நான் மாட்டேன்’ என்று மறுத்து விடும்படி ஆண்களைச் கூறச் செய்யாது. தாய் விபசாரியானால் உனக்கென்ன, அன்னத்தின் ஒய்யாரத்தைப் பார்! கொடி போலிருக்கிறாள்! குளிர்ந்த பார்வை! எண்ணத்தைக் கிளறும் இதழ் ; முரடரையும் குழந்தை உள்ளம் கொண்டவராக்கிவிடும் பேச்சு; சங்கீதச் சிரிப்பு ; அன்னத்துக்கு