பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அண்ணாவின் ஆறு கதைகள்மல்லீசுரர் ஆட்களைக் கூவி அழைத்தார் தீப்பந்தங்களுடன் ஆட்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

காளிகோயில் கிணறு, படுபாதாளம்! அதிலேதான் அவள் வீழ்த்துவிட்டாள்.

இரண்டு பிணங்கள்! மல்லீசுரரின் அதிகாரத்துக்கு மேற்பட்ட வழக்கு! எனவே பக்கத்து ஊர் போலீஸ் அதிகாரி பிரசன்னமானார் பிரேத விசாரணைக்கு. மல்லீசுரரின் தம்பி மார்க்கண்டன், இரத்தம் கக்கி இறந்தான் — பிசாசு அறைந்தால், பிசாசுபிடித்தாட்ட, கருப்பி காளிகோயில் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டாள். இது பஞ்சாயத் தார் தீர்ப்பு .