37
நல்ல வேளையாக சபா நாயகராக அமர்ந்திருக்கும் தாங்கள், மருத்துவத் துறையில், மெலிந்திருப்பவர்களுக்குக் கொஞ்சம் கடினமான டானிக்கு தந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொள்வதற்கு முன்னால், அடிப்படைத் தேவையாக உணவு, உடை, குடியிருப்பு இடம் ஆகிய இந்த மூன்று அடிப்படைத் தேவைகளைப் போதுமான அளவு நாம் பெற்றிருக்கிறோமா என்று பார்த்தால், Mr Sriman Narayanan, The General Secretary of the Congress Party has written in the Economic Review like this:
"The people feel that while the poorer sections cannot escape taxation of an indirect nature in the form of sales tax and excise duties on various necessaries of life, the richer classes have become experts in managing evasion and avoidance of taxes" ஐந்தாண்டுத் திட்டத்திற்காகப் போடப்பட்ட வரிகளைப் பற்றி அகில இந்திய காங்கிரஸின் செயலாளர் ஸ்ரீமன் நாராயண், காங்கிரசுக் கட்சியால் நடத்தப்படுகின்ற, ஏறக்குறைய Offical Journal என்று சொல்லக்கூடிய Eeonomic Review வில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், பணக்காரர்கள் தங்களுக்குப் போடக்கூடிய வரியிலிருந்து இலகுவாகத் தப்பித்துக் கொள்கிறார்கள்; ஆனால், ஏழை மக்களால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை" என்கிறார்.
தாம் மட்டும் சொன்னால் போதாது என்ற காரணத்தால், பொருளாதாரப் பேராசிரியர் கால்டர் என்பவருடைய கருத்தையும் தெரிவிக்கிறார்.
"According to Prof. Koldor's estimates, evasion of direct taxes in India is of the order of Rs. 200 to 300 crores per year." இப்படி கால்டர் என்ற பொருளாதாரப் பேராசிரியரின் மதிப்பீட்டின்படி, இந்தியத் துணைக்கண்டத்தில் ஆண்டொன்றுக்கு இப்படி ஏமாற்றும் வரி 200 அல்லது 300 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என்ற புள்ளி விபரத்தை தந்திருக்கிறார், 200 அல்லது 300 கோடி ரூபாய் என்பது அதிகமானது; 30 அல்லது 40 கோடி தான் இருக்கலாம். எவ்வளவு தாராளமாக பார்த்தாலும் 60 கோடிக்கு மேல் இருக்காது என்று இந்திய சர்க்கார் சொன்னதையும் அறிந்திருக்கிறேன். எனினும் இப்படிப் பெருத்த
5