பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


பத்தியில் ஈடுபாடுடைய நீங்கள் சேலம் இரும்பைப் பற்றிய எங்களது அறிக்கையை ஆராய்ந்து நல்லது கெட்டதை அதன் தொழில்-விஞ்ஞான் பலாபலன்களைத் தயங்காது விருப்புவெறுப்புக் கிடமளிக்காது சொல்லுங்கள். இதுவே என் வேண்டுகோள்.

இந்தியப் பொருளாதாரம்
விவசாயத்தின் அடிப்படை

இந்தியப் பொருளாதாரமே விவசாயத்தை அடிப்படையாகவே கொண்டுதான் கட்டப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நம்முடைய நாட்டு அமைச்சர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை வருகிறதா என்று கடலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலமை இருக்கிறது.

உணவுக்காக வெளிநாட்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்திருக்கிறோம். அன்னிய நாட்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தவர்கள் ஒரு ஆயிரம் கோடி ரூபாயாவது நம்முடைய நாட்டு விவசாயிக்கு கொடுத்திருந்தால் இப்படி உலகமெல்லாம் பிச்சையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது!

இந்த உணவுக்காக அன்னிய நாடுகளிடம் கையேந்தும் நிலையைவிட அவமானம் வேறு உண்டா? என்று பண்டித நேருவைக் கேட்டபோது அவரே "ஆமாம் அவமானம்தான் " என்றார். விவசாயநாடு இந்தியா ! அப்படிப்பட்ட நாட்டினர் உலகத்திடம் உணவு கேட்பதைவிடக் கேவலம் வேறில்லை!

இந்தியாவுக்கு ஆகாய விமானம் வேண்டுமென்று கேட்கலாம்; அதிலே நியாயமிருக்கிறது! கப்பல்கள் வேண்டுமென்று கேட்கலாம் அந்த துறையிலே இன்னும் நாம் "தேர்ச்சி பெறவில்லை என்பதால்! ஆனால் சோறு போடு என்றா அன்னியரிடம் கேட்பது?