பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


அவல நிலை
நீடிக்கக் கூடாது!

தஞ்சையில் மூன்றுமைல் தூரத்துக்கொரு சத்திரம் இருக்கிறது. காணுமிடமெல்லாம் கோவில்கள் இருக்கின்றன -- காதில் விழுவதெல்லாம் மந்திர ஒலியாக விழுகிறது. தெருவுக்கு தெரு - திருவிழாக்கோலமிருக்கும் இப்படிப்பட்ட வளம் நிறைந்த நாட்டில் சோறு இல்லை.

அமெரிக்காவிலேயிருந்து ஒரு நிபுணர் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அவர் அங்கே என்ன சொல்லிவிட்டு வருவார்; "ஐயோ பாவம் தஞ்சையிலே இருக்கிறவர்களுக்கு உணவுக் கஷ்டம்; அதைத் தீர்த்துக் கொள்ள வழி தெரியவில்லையாம் என்றுதான் சொல்லிவிட்டு வருவார், இப்படிப்பட்ட அவல நிலை இன்னும் நான்கு அல்லது ஐந்தாண்டுகளில் அடியோடு நின்றுவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

விவசாயிக்களுக்குத் திருப்தி ஏற்பட்டாலொழிய அவர்கள் வாழ்வில் நிம்மதி யேற்பட்டாலொழிய அவர்களின் உழைப்பு வயிற்றுப் பாட்டுக்கு வழி செய்தாலொழிய முன்னேற்றம் அடைந்ததாகக் கூறி விட முடியாது!

மனித சக்திக்குத்தான் முதலிடம் தர வேண்டும். மனித சக்தியை வீணாக்கப்படாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உழைப்பாளர்கள் நொந்த நிலையேற்படாமல் பார்த்துக் கொள்வதோடு அவர்களுக்கு நிலச் சொந்தக்காரர்கள் முதலாளிகள் ஊதியத்தைத் தாராளமாகக் கொடுக்க முன் வரவேண்டும்.

சமூக விரோதச்
செயல்

சமுதாய ஒழுக்கம் காப்பாற்றப்படவேண்டும். பதுக்கல் என்பது தவறான காரியம். அதை சர்க்காரின் நடவடிக்கை-