பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


-யினால் மட்டுமே தீர்த்து விட முடியுமென்று கருதக் கூடாது" பதுக்கல் சமூக விரோதச் செயல் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் எழவேண்டும்.

இங்கிலாந்து நாட்டில் இரண்டாவது உலகப் போரின் போது சட்டைக்கு துணி தரப்பட்டதில் சட்டைக்குப் போக மிச்சத்துணி இருக்குமானால் அதை மற்றவர்களுக்குக் கொடுத்துதவினார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக இங்கே நடக்கிறது.

லண்டனில், சண்டை நடக்கும்போது நகரத்துக்காரர்களுக்கு முட்டையே தருவதில்லை. கிராமத்திற்கு மட்டும் தான் தந்து வந்தார்கள். நகரத்திலுள்ளவர்களால் சத்தான வேறு பொருள்களையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் கிராமத்திலுள்ளவர்கள் குறைந்த விலையில் நிறைய பலன், தருவதற்கு ஏற்ற முறையில் முட்டை தரப்படவேண்டும். எனவே நகரத்திற்கு முட்டை இல்லை என்று தெரிவித்தார்கள்

இன்னபொருளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது என்றால் வசதியுள்ளவர்கள் தங்களிடமிருப்பதை மற்றவர்களுக்குத் தர முன் வர வேண்டும். ஆனால் அதற்குமாறாக இப்போது அவர்களிடம்தான் அவை அதிக அளவில் இருக்கிறது.

"உனக்கும் வேண்டுமா? ஆளை அனுப்பு" என்று சொல்லத்தக்க விதத்திலே நிலைமை இருக்கிறது. இதற்கும் தனித் திறமை வேண்டும். இந்தத் திறமையை விடப் பொதுமக்கள் நன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

எந்தப் பொருளுக்கு பற்றாக் குறை ஏற்பட்டு பங்கீடு முறை இருக்கிறதோ அந்தப் பொருள்களால் கள்ள வாணிகமும் பதுக்கலும் ஏற்படுகிறது--இதைத் தடுக்க வேண்டும்.