பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


உழைப்புக்கு
மதிப்புத் தரவேண்டும்

தஞ்சைத் தரணியில் பெரிய கோபுரம் கட்டப்பட்டடிருக்கிறது. இதற்குப் பணம் உதவியிருக்கிறவர்கள் உயரமான வீட்டிலா குடி இருக்கிறவர்கள்?

கோயிலுக்கு மதில் சுவர் கட்டப்பட்டிருக்கிறது; அதற்கு உதவியிருப்பவர்களின் வீடுகளில் சுற்றுச் சுவரா இருக்கிறது?

தேவன் தேவியாருக்கு நகைகளைப் பூட்டி வைக்க உதவுகிறவர்களின் வீட்டில் அதைவிட நகைகளா இருக்கின்றன? இல்லை தான்; ஆனாலும் பொதுக் காரியங்களுக்கென்று தர்ம சிந்தனையோடு தரப்படுகிறது. இங்கே, கொடுத்தால் அது தமக்குத் திரும்பி வரும். இம்மையில் செய்தது மறுமைக்குப் பயன்படும் என்பார்கள்.

உதாரணமாக உழைப்பாளி நிலத்திலே உழுது கொண்டிருக்கும்போது நிலத்துக்குச் சொந்தக்காரர் வந்தால் "அங்கே. வேல முள் இருக்கிறது வராதீர்கள்!" என்று முன்பெல்லாம் எச்சரிக்கை செய்வார்கள்.

இப்போது சொல்லுவானா? மாட்டான். முள் குத்தட்டுமே--எரியட்டுமே என்று நினைத்துச் சும்மா இருப்பான். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை; இந்த நிலை இனி இருக்காது. அதனால் தான் விவசாயிகளைத் திருப்தியோடு வைத்துக்கொள்ள வேண்டும்; உரம் போட்டால் விளையாத நிலம் கூட அவன் உடலிலிருந்து விழும் வியர்வையால் விளையும்!

உழைப்புக்கு மதிப்பளித்து வந்தால் தான் உற்பத்தி பெருகும். வீட்டுத் தோட்டத்தில் "மாட்டுக் கொட்டகை போடு என்று தொழிலாளிக்குச் சொன்னால் அவன் முணுமுணுத்துக் கொண்டே போவான்; ஆனால் மகளுக்குக்