பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


நண்பர்கள் பயிர்களை அழிக்கும் சிறவை யெனும் பறவையைப்பற்றிக் கூறினார்கள். காட்டிலாகா அதிகாரிகளோடு கலந்து பேசி அப்பறவைகளை அழிக்கலாமா வேண்டாமா என்பதுபற்றிக் கேட்டறிய விரும்புகிறேன்.

அது ஒரு அபூர்வமான பறவை அழிக்கக் கூடாது என்பார்களேயானால் இருக்கின்ற உயிர்களிலேயே மனிதர்கள்தான் அபூர்வப் பிறவிகள் அவர்கள் வாழ வேண்டும்; சிறவை இல்லாவிட்டால் பரவாயில்லை என்றுதான் கூறுவேன். வேறு நல்ல காரணமிருந்தால் அதைப்பற்றி நான் ஆலோசிப்பேன்.

பூச்சித் தடுப்பு முறைபற்றி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது தனித்தனியாக முயன்று பண்ணைகளில் பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருப்பதை விட நிலப்பரப்பு முழுவதிலும் பூச்சித் தடுப்பு மருந்து தெளிக்க சர்க்கார் தொடங்க வேண்டும் என்று கூறப்படுகிற யோசனை மிகவும் பிடித்திருக்கிறது.

இதற்காக சில எலிகாப்டர்களோ-விமானங்களோ வாங்க வேண்டியிருக்கலாம்.

அமெரிக்காவில் பூச்சித்தடுப்பு மருந்தை தனியொரு நிறுவனத்தினரே தெளிக்கின்றனர் என்று நான் அறிந்தேன்.

சாகுபடி குறைவு ஏற்பட்டிருப்பதை நீக்க அடிப்படையாக இத்திட்டம் இருந்தே தீரவேண்டும் இதை உடனடியாகக் கொண்டு வரவேண்ம் மென்பது எனது விருப்பம்!

பூச்சிகளாலும் -- இயற்கையாலும் ஏற்படுகின்ற கோளாறுகளால் அழிவேற்படுவதைத் தடுப்பது விவசாயத்திற்குத் தேவையானது என்பதால் தமிழக சர்க்கார் இம்முயற்சியில் ஈடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பஞ்சாயத்துக்களிடம் நிரம்பப் பணமிருந்து விவசாயக் கருவிகள், டிராக்டர்கள் வாங்கிக்கொள்ள முடியாமல் சட்டம் குறுக்கிடுகிறது என்று சொன்னார்கள். அப்படி அதற்கெல்லாம் சட்டம் குறுக்கிடுமானால் அதற்கு சட்ட அந்தஸ்தே இருக்-