பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


-காது! பணத்தைச் செலவு செய்வதை முடக்கும் முறையில் சட்டம் இருக்காது.

டிராக்டர்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடலாமா? என்று என்மனம் துடித்தது. என்றாலும் சட்டத்தைக் கவனிக்க வேண்டியவனாக இருக்கிறேன். 67 மார்ச் 6-ஆம் தேதிக்குப் பிறகு சட்ட திட்டங்களுக்கு மேலும் அடக்கமானவனாக இருக்கிறேன்.

இவையெல்லாம் நமக்கு நடத்த முடியும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

பம்பிங்ஸ்கீம் சரிவர நடைபெறவில்லையென்கிறார்கள் இதற்கான முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கருதுகிறேன்.

காவேரி நம் நாட்டில் பாய்கிறது-ஆனால் உற்பத்தியாவது இங்கில்லை.

துள்ளி ஓடும் அழகு நம்மிடம்தான், ஆனால் பொங்கிப் புறப்பட்டு வருவது நம்மிடமிருந்தல்ல. மைசூர் மாநிலம் நாம் தண்ணீர் எடுத்து வருவதற்கு மறுக்கும் என்று நான் கருதவில்லை.

தமிழகம் - இப்போது கேரளம் கருநாடகம் - ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்களும் ஒன்றுபட்டு இயற்கை வளங்களைப் பங்கிட்டுக் கொள்ளுவதை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஒப்பந்தங்களில் தகராறுகள் இருக்காதென்றும் நம்புகிறேன்.

கேரளம் - தமிழ்நாட்டுக்கு மிடையே, ஆனை மலையாறு நம் பகுதியில் பாய்ந்து வருகிறது. ஆனால் கேரளத்தில்தான் தேக்கம் இருக்கிறது. ஆனை மலை நீரை எங்களுக்கு விட்டுவிடுங்கள் என்று நம்முடைய இஞ்சினீயர்கள் கேட்கிறார்கள். உடனே கேரளத்து சீப் இஞ்சினீயர் எங்களுக்கு வேண்டும் என்கிறார்.