பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


நம்முடைய மாநிலத்து சீப் இஞ்சினீயரின் கீழிருந்து பணியாற்றியவர் தான் அவர்.

ஆனால் மாநிலங்களின் முதலமைச்சர் நமக்கு நன்மை செய்வதில் நல்ல கருத்தோடு இருக்கிறார்கள்.

கேரளத்து முதலமைச்சரைச் சந்தித்தபோது நான் அவரிடம் "அரிசி கேட்கிறீர்கள் தருகிறோம்; ஆனால் கடலில்போய் வீணாகும் கேரளத்துத் தண்ணீரை எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். கேரளா அமைச்சர் தருகிறேன் என்று கூறியதாகப் பத்திரிகைச் செய்தியொன்றைப் பார்த்தேன்.

அந்தச் செய்தி, செய்தியாளரின் ஆர்வத்தால் வெளியிட் டதாக இல்லாமல் உண்மையானதாக-ஆதார பூர்வமாக அமையுமானால் - தண்ணீரைப் பெற்றுக் கொண்டு அரிசியை தருவதற்கான பிரச்சினையில் நான் அக்கரை காட்டுவேன்.

தமிழகத்தில் கேரளத்து மக்கள் லட்சத்துக்குமேல் இருக்கிறார்கள். ஆனால் கேரளத்தில் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் தான் இருக்கின்றனர். கேரள மக்களுக்கு நாங்கள் இப்போதும் சோறுபோட்டுக்கொண்டிருக்கிறோம் என்று நான் நம்பூதிரிபாட்டிடம் சொன்னேன்.

அரிசிக்கு தண்ணீர்
பண்டமாற்று.

நான் கேரளத்துக்கு அரிசி உதவத் தயக்கம் காட்ட மாட்டேன். அதேபோல் தமிழகத்துக்குத் தண்ணீர் தர கேரளம் தயக்கம் காட்டக்கூடாது.

கிருஷ்ணா-பெண்ணாறு திட்டம் உடனடியாக முடிந்தால் காவேரித் திட்டமே தேவையில்லை. ஆனால் அது உடனடியாக முடிவதாகத் தெரியவில்லை. இதிலே சில சிக்கல்கள்