பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


ஆந்திராவும்
நாமும்

நெல்லுக்கு விலை உயர்த்திக் கொடுக்க வேண்டுமென்று சிலர் கோரினர்.

மத்திய உணவமைச்சர் சகசீவன்ராமே சொல்லிவிட்டாரே இனி ஏன் கேட்கிறீர்கள் என்று நான் சொல்லமாட்டேன். அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும் வேறு சில மாநிலங்கள் நெல்லுக்கான விலையை உயர்த்தி உள்ளன.

ஆந்திரா அப்படி உயர்த்தியுள்ளது. தான் கொள்முதல் செய்யும் அரிசியை கேரளத்துக்கும், மேற்கு வங்காளத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் லாபத்துக்கு ஆந்திரம் விற்கிறது. நாம் அப்படி வெளியில் விற்பதில்லை. நம்முடைய மக்களில் நலிந்த பகுதியினரது தேவைகருதி, அவர்களுக்கு விநியோகிக்கவே நாம் கொள்முதல் செய்கிறோம்.

அதிலும் நாம் எந்த அளவு கொள்முதல் செய்கிறோம். நூற்றுக்கு இருபது பங்கு நெல்லை மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள எண்பது சத விகிதம் உற்பத்தியாளர்களிடமும் அவர்களிடமிருந்து வாங்கிடும் வணிகர்களிடமும் விடப்படுகின்றது. அவை இன்ன விலைக்குத்தான் விற்க வேண்டுமென்று கட்டாயமில்லை.

ரூபாய்க்குப் படி அரிசி என்று திட்டம் போட்டு அதன் படி போடுவதில் இப்போது நெல்லுக்குக் கொடுக்கும் விலையினால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 8 கோடி செலவாகுமென்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் குறுவை நெல் நடுத்தர நெல்லென்று நிர்ணயிக்கப்படாமல் சட்டத்தில் இந்த நெல்லை முதல் தர நெல் என்று சொல்லி எழுதி வைத்திருக்கிறார்கள். இதனால் அதிக விலை கொடுக்க நேரிடுகிறது. இப்படி அதிக விலை கொடுப்பதால்