பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


நட்டம் ரூ. 17 கோடிவரை வளருமோ என்ற ஒரு அச்சமும் உள்ளது.

குறைவாக அளந்தால்
தலைதப்பாது!

நெல் விலையை அதிகரித்தால் இவர்களால் படி அரிசித் திட்டத்தை தொடர முடியாது -- இவ்வளவு நாள் போட்டோம் -- இதற்குமேல் முடியவில்லை என்று நாங்கள் (தி.மு.க.) ஆட்சியை விட்டுப் போய்விடுவோம் -- அரசியல் லாபம் பெறலாம் என்று நினைப்பவர்கள் இருக்கக் கூடும். அந்த லாபம் நிரந்தரமானதல்ல - சாதாரணமானதல்ல.

படி அரிசி என்பது எங்களோடு போய்விடாது. யார் இனி ஆட்சிக்கு வந்தாலும் அந்தஅளவு போடாவிட்டால் அவர்கள் தலைதப்பாது. நெல்லின் விலை அதிகரித்தால் படி அரிசி திட்டத்துக்கு ஆகின்ற செலவு மேலும் அதிகரிக்கும். இப்போது அரசாங்கம் 8 கோடி அளவுக்கு கிராக்கிப்படி உயர்வு அளித்தது. இப்படி அதிகரித்துக்கொண்டே போவதால் நாட்டில் - பணவீக்கம் தான் அதிகரிக்கும். அப்படி மக்கள் கைக்கு வரும் பணமும் தங்காது.

ஆகையினால் விலைவாசிகள் இறக்கப்படுவதொன்றே உண்மையான வாழ்க்கைத்தர உயர்வுக்கு வழிகோலும் என்பதை உணர்ந்து அரசு எடுக்கும் நற்காரியங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தடுத்து
நிறுத்தப்பட வேண்டும்

விலைவாசிகள் குறையாதவரை வேறு எந்தச் சீர்திருத்தம் செய்தாலும் அது நிலைக்காது. இதை எல்லாம் கருதியே கொள்முதல் நெல்லுக்குப் போன வருடம் கொடுத்ததைக் காட்டிலும் அதிகமாக இந்த ஆண்டு கொடுக்க வேண்டாம் என்ற தீர்மா-