பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


-னத்துக்கு வந்தோம். பரந்த பொருள் மிகுந்த இந்த நோக்கத்தை அருள் கூர்ந்து உணரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயச் செலவுகளைப் பற்றி இங்கு கூறப்பட்டது. இந்த ஆண்டு செலவு சென்ற ஆண்டு ஆன செலவைவிட எந்த அளவுக்கு எதனால் அதிகரித்துள்ளது என்று பார்க்கவேண்டும்.

உரவிலை உயர்ந்ததால் செலவு. கூடியுள்ளதென்பது உண்மையே. இதர எல்லா அம்சங்களிலும் சென்ற ஆண்டு இருந்ததுபோலவே இவ்வாண்டும் உள்ளது. உரவிலை உயர்வு - நான் மட்டுமே காரணமல்ல - நண்பர் விநாயகமும் ஓரளவு பொறுப்பாளி. விவசாயச் செலவையும் புதிய ரக நெல் விளைச்சலால் ஏற்பட்டுள்ள நல்ல பலனையும் ஒப்பு நோக்கிச் சொல்லுங்கள் - 10 மூட்டை விளைந்த நிலத்தில் இப்போது 30 மூட்டை விளைகிறதல்லவா? எனவே வரவேண்டிய ஆதாயம் வருகிறதா இல்லையா? சொல்லுங்கள் - ஆதாயத்தில் வேண்டுமானால் துண்டு விழலாம் - ஆதாயமே இல்லையென்று உங்களில் யாரும் சொல்லமாட்டீர்கள்.

இந்த ஒரு வாரத்தில் மத்திய அரசு 90 கோடி ரூபாய்க்கு நோட்டுகள் அச்சிட்டுள்ளது. நான் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறேன் - நாட்டு வாட்டம் போக்கிட நோட்டடித்தால் போதாது - என்று சொல்லி வந்திருக்கிறேன். பணம் வட்ட வடிவமானது - உருண்டோடி கீழே விழுகிறவரை ஓடிக்கொண்டே இருக்கும் - காகிதத்தலான நோட்டும் தங்காது - பறந்துகொண்டேயிருக்கும். எங்கேனும் ஒரு இடத்தில் இதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களும் - நிலச் சொந்தக்காரர்களும் தனிக் கவனம் செலுத்தி உணவு உற்பத்திப் பிரச்சனையில் முதலிடம் தந்து உணவு நெருக்கடியைத் தீர்க்க உதவிடவேண்டும். பசிப்பிணி என்ற சொல்லையே தமிழர்கள்தான் கண்டுபிடித்தனர் - பயன்படுத்தினர். எத்தனையோ பிணிகள் இருப்பினும் - தமிழிலக்கியத்-