பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


தஞ்சை மாவட்டத்திலுள்ள நிலச் சொந்தக்காரர்களும். பெருங்குடி மக்களும், தொழிற் சங்கச் செயலாளர்களும் இணைந்து செயலாற்றி உற்பத்தியைப் பெருக்கித்தர ஏற்பாடு செய்து இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கவேண்டும்.

நஞ்சைத் தஞ்சைநல்வழி காட்டும்

சிற்பத்துறையிலும் - சங்கீதத் துறையிலும் முன்னோடியாக விளங்குவது போல - விவசாயத் துறையிலும் முன்னோடியாக விளங்கி இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும்.

தரிசு நிலமும்
விளை நிலமாகலாம்

அரசே தரிசு நிலங்களைத் தன் செலவில் பண்படுத்திய பிறகு அந்நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு 10,15 ஆண்டுக் குத்தகையில் விடும். அந்நிலத்தைப் பண்படுத்திட ஆன செலவை ஒவ்வோர் அறுவடையின் போதும் சிறிது சிறிதாக அரசுக்கு அந்த விவசாயி செலுத்தி வர வேண்டும். முழுத் தொகையும் செலுத்தியான பிறகு அந்நிலத்தை விவசாயிக்கே சொந்தமாக்கிவிடும். இவ்வாறு ஒரு திட்டமிட்டுச் செயலாற்ற இருக்கிறது தமிழக அரசு!

புதுக்கோட்டை. அருகே குடுமியாமலைப் பகுதியில் சீரணியினரால் பயிரிடத்தக்க நிலமாக மீட்கப்பட்டு வரும் நிலத்தில் முதல் ஆயிரம் ஏக்கரில் குத்தகைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைக் குடியேற்றலாமா என்றும் யோசித்து வருகிறேன்.

மத்திய உணவமைச்சர் சகசீவன்ராமிடம் இது பற்றி பேசினேன். எதெற்கெடுத்தாலும் டில்லியிலா கேட்பது என்கிற காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்கள், முடிந்தால் சொல்லட்டும் - டில்லியிடம் கொடுக்க வேண்டாமென்று அவர்கள்