பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


மத்திய அரசு தான் நடத்திப்பார்க்க விரும்பும் எத்தகைய மேம்பாடானதிட்டமாயினும் தமிழகத்தில் வத்து நடத்தட்டும். வெளிமாநிலங்களில் ஒரு காரியத்தைச் செய்ய 100 ரூபாய் செலவாகுமானால் இங்கே அதே காரியத்தைச் செய்ய 80 ரூபாய் தான் செலவாகும்.

முன்னாள்
முதல்வரின் முறையீடு

முன்னாள் தமிழக முதலமைச்சர் குமாரசாமிராஜா இதை அப்போதே வலியுறுத்தினார். வடக்கே கொட்டும் பணத்தில் ஒரு பகுதியைத் தமிழகத்திற்குக் கொடுங்கள், உணவு உற்பத்தியைக் குவித்துக் காட்டுகிறோம் என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் ஏற்பட்ட புதிய ஆட்சி அதன் முதல் ஆண்டிலேயே இரண்டு புதிய வரிகளின் மூலம் இந்த பத்து மாதங்களில் ரூ. 6 கோடி அளவுக்கு அதிக வருவாயைத் தேடியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன, இன்னும் இரண்டு கோடி ரூபாய் சேரும்.

இந்த அளவுக்கு ஈடாக வேனும் மத்திய அரசு மானியம் கொடுத்து உதவக் கூடாதா ? இந்த நாட்டிற்கு ஒருங்கிணைந்த தேசிய தண்ணீர்த் திட்டம் தேவை என்று இங்கு பேசப்பட்டது. இதே கருத்தை நீண்ட நெடுநாட்களுக்கு முன்பாகவே டாக்டர் சி. பி. ராமசாமி ஐயர் தெரிவித்தார். நாள் தவறினாலும் ஒருமைப்பாட்டைப் பற்றிய பேச்சு தவறுவதில்லை, ஆனால் நதிகளின் நீரை இணைப்பது பற்றி இதுவரை யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

கிருஷ்ணா கோதாவரியைப் பெண்ணாற்றுடன் இணைத்தால் வரண்டு கிடக்கும் தமிழ் நாட்டுப் பகுதிகள் பலமடையும். மேற்கே ஓடி கடலில் விழுந்து வீணாவதாகச் சொல்லப்படும் ஆறுகளின் நீரும் தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிடப்பட்-