பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அப்படிச் செய்வதற்கு முன் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். ஏனென்றால் அந்தச் சட்டத்தில் மதுவிலக்கைப் பரப்ப வேண்டும் என்று ஆணைக் கொள்கை (Directive. Principle) இருக்கிறது.

அந்த அரசியல் சட்டத்தின் பேரில்தான் நாம் ஆணையிட்டு அதன்படி நடக்க உறுதி கூறியிருக்கிறோம்.

அதன்படி நடப்பதாயிருந்தால் மற்ற மாநிலங்களிலும் மதுவிலக்குக் கொள்கையைக் கொண்டுவரட்டும்.

இந்த மதுவிலக்குக் கொள்கையையும் கைத்தறிக் கொள்கையையும் கடைப்பிடிப்பதால் தமிழக அரசுக்கு ஏற்படும் கஷ்டத்தை, நஷ்டத்தை ஏற்க மத்திய அரசு முன் வரவேண்டும்.

மதுவிலக்குக் கொள்கையை இவ்வளவு கஷ்டத்திலும் கடைப்பிடிப்பதற்காக- காந்தீயக் கொள்கையைக் காப்பாற்று வதற்காகவாவது மத்திய அரசு பரிசாக ஒரு தொகையை அளிக்க முன்வரவேண்டும்.

மாசு துடைக்க வந்த
மாபெரும் மகான்

உலக உத்தமர் காந்தியடிகளின் பிறந்தநாள், நாடெங்கும் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது, அவரவர் தத்தமக்கு விருப்பமான முறையில் காந்தியடிகளுக்குத் தமது. அன்பினைக் காணிக்கையாக்கி அளிக்கின்றனர்.

அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலைகளிட்டும்—அவர் புகழ் பற்றிய பாடல்களை இசைத்தும் — பஜனை நடாத்தியும், நூற்புத் தொண்டாற்றியும், சேரிகளைத் திருத்தும் பணிபுரிந்தும் இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.

அவர் ஓர் தூயவர். நமது மார்க்கத்தின் மாசு துடைத் திட வந்த மகான் — என்பாரும்;