பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


போர் முகாம் அமைத்து அல்ல, எளிய குடில் அமைத்து; வெட்டச்சொல்லி அல்ல, வெட்டுண்டவர் போக ஏனையோர் அறப்போர்ப் பாதை நடந்திடுக என்றுரைத்து; ஆத்திரம் ஊட்டி அல்ல; அன்பினை ஊட்டி;

மகான்களிடம் அமைந்திருப்பதாகக் கூறப்படும் அற்புதங்களைக் கண்டவர் அல்ல, இன்று கதை கூறுவோர்? காந்தி அடிகள் நடத்தின அற்புதத்தை நாம் நமது கண்களால் கண்டோம்.

அந்த - அரை ஆடை மனிதர் கோடானுகோடி மக்களுக்கு மானமுள்ள வாழ்வு பெற்றுத் தந்ததைவிட "அற்புதம்” வேறு என்ன இருக்க முடியும் !

"இவரா இந்தியாவின் தலைவர்?" என்று எள்ளிநகையாடியவர்கள் அந்த அற்புதம் நடைபெற்ற பிறகு "இவரன்றோ தலைவர்!" என்று புகழ்ந்தனர்! இந்நாட்டுக்கு மட்டுமல்ல அடிமைத்தளை உடைத்திட விரும்பும் எந்நாட்டுக்கும் அவர் காட்டிய அறப்போர் முறை பொருத்தமானது என்று இன்று ஆய்வாளர் பலர் கூறுகின்றனர். ;

“இந்தியா என்றோர் நாடுண்டு; அங்கு ஏலம், கிராம்பு பெறுவதுண்டு; பொன்னும் பொருளும் மிக உண்டு ; போக்கறியாதார் நிரம்ப உண்டு !" என்ற அளவில், பதினாறாம் நூற்றாண்டிலே உலகம் அறிந்திருந்தது.

பிறகு படிப்படியாக இந்தியா பிரிட்டிஷ் பிடியிலே சிக்கி விட்டது. அப்போது, அப்போது, "இந்தியா என்றோர் நாடுண்டு. அது ஆங்கிலேயர்க்கு நல்ல வேட்டைக்காடு!" என்று உலகம் இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டது.

விடிவெள்ளி தோன்றுவது போல திலகர் காலத்திலே விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்ற போதிலும் காந்தி அடிகள் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே “ இந்தியா