பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


இவ்வாறு விவசாயத்தை பலப்படுத்துவோமானால் இந் நாட்டுப் பொருளாதாரம் புத்துயிர் பெறும். புது வலிவு பெறும்.

விரைவான நற்பலன்களைக் கொடுக்கக் கூடிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்பதில் தமிழக அரசு நெருங்கிய அக்கறை கொண்டுள்ளது.

இவ்வகையில் மின் உற்பத்தியை அதிகரிப்பதிலும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தமிழக அரசு இப்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இத்தகைய உடனடிப் பலன்களை அளிக்கக் கூடிய திட்டங்களுக்காகவே தமிழக அரசு கடன் எழுப்பியிள்ளது. இக்கடனுக்குத் தாராளமாகக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

உணவைப் பொறுத்த மட்டில் நாம் உபரி மாநிலம் என்ற நிலையை அடைந்து விடுவோமானால், நமது மாநிலம் தொழில் வளத்தை நோக்கி முன்னேற அதுவே ஒரு உந்துகோலாக அமையும்.

உற்பத்தியைப் பெருக்கும் காரியத்தில் ஒருமாநில சர்க்கார் ஈடுபடுகிறதென்றால் ஏற்படும் நஷ்டத்தை மத்திய சர்க்கார் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விலை ஏற்றத்திற்கு முழுப் பொறுப்பை ஏற்க வேண்டியது மத்திய சர்க்கார் தான்! என்ன காரணம்? பணவீக்கம் ஏற்படவும். அதனால் விலைகள் உயரவும் காரணமாக இருப்பது மத்திய சர்க்கார்தான்.

தாயுள்ளம்
வேண்டும்

தாய் பத்தியமிருந்து குழந்தைக்குப் பால் கொடுப்பது போல மத்திய சர்க்காரும் தாய்மைநிலையிலிருந்து மாநில அரசுகளுக்குத் துணைபுரிய வேண்டும்.