பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


"நீயாகச் செய்ய வேண்டிய காரியம் இது-நாங்கள் என்ன செய்ய முடியும்" என்று மத்திய அரசாங்கம் கூறுமானால் நாங்கள் எது வேண்டுமானாலும் செய்வோம்--மத்திய அரசு அதற்குத் தயாரா?

தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் எந்தப் பொருளையும் எந்த வெளிநாட்டிற்கும் விற்பது-தேவையான பொருளை தருவித்துக் கொள்வது போன்ற உரிமைகளையெல்லாம் மத்திய அரசு எங்களுக்கு விட்டு விடுமானால், அதற்கான உரிமை தருமானால் எதற்கும் நாங்கள் மத்திய அரசாங்கத்தை எதிர்பார்க்கமாட்டோம்.

வெங்காயம் முதற் கொண்டு கைத்தறித் துணிகள் வரை எல்லாப் பொருள்களையும் ஏற்றுமதி செய்யும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் தான் இருக்கிறது. வெளி நாடுகளிலேயிருந்து குண்டூசியை, வரவழைத்துக் கொள்வதற்கான அதிகாரமும் மத்திய சர்க்காரிடம் தான் இருக்கிறது. எல்லாவற்றிலும் மந்திய அரசாங்கம் தான் குறுக்கிடுகிறது. சில பிரச்சினைகளில் விட்டு விடுவதும் சங்கடமான பிரச்சனைகளில் தலையிடுவதும் நியாயமல்ல.

மத்திய சர்க்காரிடமிருந்து நிதி உதவி வந்த பிறகு தான் ஒரு படி அரிசி போட வேண்டும் என்று மக்களைக் காத்திருக்கச் செய்ய எனக்கு மனமில்லை -- என்பதாலேயே உத்தரவு போட்டு விட்ட பிறகு மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தி நிதி கேட்கிறோம்.

பக்தவத்சலம் ரூபாய்க்கு 8 படி கேட்டு ஊர்வலம் நடத்துவோம் என்றார். அதற்கு நான் பதிலளிக்கும் வகையில் மத்திய அரசிடம் 30 கோடி கேட்டுப் பதில் ஊர்வலம் நடத்துவேன் என்று சொன்னேன்.

அதற்கு பக்தவத்சலம் பதிலளிக்கும்போது "தி.மு.க. 'ஊர்வலமா? அதில் என்னென்னமோ நடக்குமே" என்று சொல்லியிருக்கிறார். அப்படி ஒன்றும் நடக்காது!