பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


எங்கள் ஊர்வலத்தில் மக்கள் அதிகமாக இருப்பார்கள். உங்கள் ஊர்வலத்தில் மக்கள் குறைவாக இருப்பார்கள். இந்த வித்தியாசத்தைத் தவிர வேறு ஒன்றும் இருக்காது.

ரூபாய்க்கு ஒரு படி என்று நாங்கள் போடும் போது விவசாயிகளிடமிருந்து ரூபாய்க்கு ஒரு படி என நாங்கள் வாங்கவில்லை.

பக்த்வத்சலம், ஆட்சிக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஒரு காசுகூடக் குறைக்காமல் கொடுத்துத்தான் நெல் வாங்குகிறோம். அப்படிக் கொள் முதல் செய்து சில பகுதிகளில் அரிசி விலையைக் குறைத்துக் கொடுக்கிறோம். இதற்கு மத்திய அரசாங்கம் நிதி உதவி தர மறுப்பது மட்டுமல்லாமல் இப்போது உர விலையை வேறு உயர்த்தியிருக்கிறது-- இது நியாயந்தானா?

ஒருவருடைய கையை நீட்டச் சொல்லி அதில் ஒரு பிடி அரிசியையோ சோற்றையோ போடும்போது பின்னாலிருந்து ஒருவர் காலை இழுத்துவிட்டால் அந்த ஒரு பிடி அரிசியோ சாதமோ அவரது கையிலா போய் விழும்? உற்பத்தியைப் பெருக்கு என்று சொல்லும் மத்திய அரசாங்கம் உர விலையை உயர்த்தியுள்ளது.

நாங்கள் பதவி ஏற்றபோது எங்களுடன் ஒத்துழைப்போம் என்று சொன்னார்கள். கல்யாண வீட்டில் ஆசீா்வாதம் பண்ணுவதுபோல அப்படிச் சொன்னார்கள்,

ஆனால் நடைமுறையில் அந்த ஒத்துழைப்பு இல்லை. உர விலையை ஏற்றியது நியாயமானதோ மனிதாபிமானமுள்ள செயலோ அல்ல.

உர விலையைக் குறைக்கச் சொல்லி நாங்கள் கேட்டதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட நிறுவனங்களும் குரல் எழுப்ப வேண்டும். உர விலையை உயர்த்தினால் உணவு