பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

 உற்பத்தி பாதிக்கும். ஆகவே இது அக்ரமமானது என்பதை மத்திய அரசு உணரச் செய்ய மக்களெல்லாம் ஒத்துழைக்க வேண்டும்.

பசி நீங்கிட
அரிசி கிடைத்தது

பக்தவத்சலம் கூறுகிறார் சென்னை-கோவை நகரங்களுக்குத்தானா ரேசன்? மற்ற இடங்களுக்கு இல்லையா ? என்று!

இந்த ரேசனை சென்ற வருடம் காங்கிரஸ் எப்படி நிறைவேற்றியது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

என் வீடு இருக்கின்ற நுங்கம்பாக்கம் பகுதியிலுள்ள ஒரு ரேசன் கடையில் காலை 6 மணிக்கு வந்து அரிசி வாங்குவதற்காக வரிசையில் நின்ற அன்னையார் ஒருவர் மாலை 6 மணிக்குத் திரும்பிச் சென்றார். கையில் அரிசியோடு அல்ல! கைக் குழந்தையோடு!

வெயிலின் கொடுமை தாளாமல் அலறி அலறி இடிபாடுகளால் இடுப்பு நோக மகவொன்றைப் பெற்றெடுத்துச் சென்ற பரிதாபம் காங்கிரஸ் ஆட்சியைத் தவிர வேறு எங்கும் காண முடியாது.

ஆனால் இப்போது அந்தப் பகுதியில் போய் அரிசி உண்டா என்று கேளுங்கள் எவ்வளவு வேண்டும் என்பார்கள். இதை விட்டு விட்டு நீ என்ன செய்தாய்? என்ன. செய்தாய்? என்றால் என்ன பொருள்?

அரிசி கிடைக்காத இடத்தில் அரிசி கிடைக்கச் செய்தோம்!

இது என்ன பிரமாதமா என்கிறார்கள், பிரமாதம் இல்லை என்றால் நீங்கள் ஏன் செய்யமுடியவில்லை?